உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் - 27

லெனின்; அறியாது வினாயினாய், எல்லா உயிர்களிலுங் காமவிருப்பு மீதூர்ந்து முனைத்துச் செல்வது, ஆணே யன்றிப் பெண் அல்லாமையானும், அங்ஙனம் அவ் விருப்பு மீதூர்ந்த வழி ஆணுடம்பு அனலாய் நிற்க அதன் ஆண் உறுப்பு விறைத்து அனல் வடிவுபோல் நேர் நின்று புணர்ச்சிக்குக் கருவியாய் நிற்றலானும், மற்றுப் பெண் ணெல்லாந் தாமாகவே பரும்பாலுங் காமவிருப்பு மீதூரப் பெறுதலின்றி ஆண் விருப்பைக் கண்டவழி அஃது எழப் பெற்று அங்ஙனம் எழப் பெற்றவழியும் ஒரு வரம்பில் அடங்கியே நிகழக்காண்டலானும், அங்ஙனம் நிகழ்வுழிப் பண்ணுறுப்பு முனைத்தெழ மாட்டாதாய் நீர்வடிவாய் நெகிழ்ந்து ஆணுறுப்பின் நுழைவுக்கு இடந்தந்து குளிர்ந்த தன்மைய தாகவே நிற்குமளவன்றி வேறல்லாமை அறியப் படுதலானும் ஆணுடம்பில் தீ யுருவும் பெண்ணுடம்பில் நீருருவும் விரவி நின்று அவையிரண்டனையும் வடிவானுந் தன்மை யானுந் தங் கூற்றிற் படுத்திருத்தல் நன்கறியப் படுமென்க.

அற்றாயின், எரியினை வளர்த்து அதனை வழிபடுதலே செயற்பாலது; பண்டிருந்த தமிழ்ச் சான்றோரும் முத்தீ வேட்டு அதனையே வழிபட்டு வந்தனர்; மற்றை மேல் நாடு கீழ்நாடுகளிலிருந்த அறிஞரும் பிறரும் நெருப்புருவினையே வழிபட்டு வந்தனரென்பதற்கு அவர் சாம்பற் பூசுந் திரு நாளொன்று இன்று காறுங் கொண்டாடி வருத

ருதலே

சான்றாம். அவ்வாறிருக்க, அதனை விடுத்து உருண்டு நீண்ட குழவிக் கல்வடிவு மண்வடிவில் வைத்துச் சிவபிரானை வணங்கி வருதலும், இயற்கையுண்மைச் சிவக் குறியான தீப்பிழம்பினைச் சிவலிங்கமெனக் கொண்டு அதனை வழிபடுதல் செய்யாது செயற்கையாகச் சிற்றறிவுடைய மக்களாற் செய்யப்படுங் கல்வடிவு மண் வடிவுகளைச் சிவலிங்கமென விதந்து வைத்து அவற்றிற்கு வழிபாடு ஆற்றிவருதலும் பொருந்தாவாம் பிறவெனின்; அறியாது கூறினாய், தீ வடிவு இயற்கைச் சிவலிங்கமே யாயினும், அதனை வழிபடுவார் அதன்பால் அன்புமீதூரப் பெற்றவழி, அதனைச் சென்று தொடுதலும் அணைதலும், அதற்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/221&oldid=1591191" இலிருந்து மீள்விக்கப்பட்டது