உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

237

அவை; திருவாரூர், திருவிடைமருதூர், திருவொற்றியூர், திருக்கடவூர், திருக்கருவூர், திருநாவ லூர், திருப்புகலூர், திருப்புன்கூர், திருமயிலாப்பூர், திருவான்மியூர் முதலான ன்னும் பலவாகும்

ங்ஙனமாக, மலை, காடு, கா, பொழில் முதலான டங்களை உறைவிடமாய்க் கொண்டு, எல்லாம் வல்ல இறைவனை நெருப்புருவில் வைத்து வணங்கியபோதும், நருப்புருவைக் கைவிட்டு அதனோடொத்த கல்வடிவு மண்வடிவில் வைத்து இறைவனை வணங்கியபோதும், அவர் அவ்வணக்கத்தைச் செய்தது ஒரு மரத்தின் நீழலிலே யாகும், திருப்புலியூர் என்னுஞ் சிதம்பரத்தில் தில்லை மரத்தின் கீழும், திருவாலவாயிற் கடம்பமரத்தின் கீழும், திருவானைக்காவில் நாவல்மரத்தின் கீழும், திருப்பாதிரிப் லியூரிற் பாதிரி மரத்தின் கீழும் திருமயிலாப்பூரிற் புன்னைமரத்தின் கீழும், திருவொற்றியூரில் மகிழமரத்தின் கீழும் ன்னும் இவ்வாறே ஒவ்வொரு திருக்கோயிலும் ஒவ் வாரு மரத்தின் கீழும் அமைந்திருத்தலை உற்று நோக்கவல்லார்க்குப் பண்டிருந்த தமிழ் மேன்மக்கள னைவரும் எல்லாம் வல்ல சிவபிரானை மர நிழலில் வைத்தே வழிபாடாற்றி வந்தமை தெற்றென விளங்கா நிற்கும்.

ஆ! மலைமேலும், நிலத்தின் கீழுங், காடுகளிலுங் காக்களிலும் மரத்தின்கீழ் முத்தீ வளர்த்தும், அத்தீப்பிழம்பிற் கறிகுறியான சிவலிங்கம் நிறுத்தியும் இறைவனை நந்தமிழ் மேன்மக்கள் வழிபட்டு வந்த ஞான்று அவருள்ளம் எத்துணை ஆறுதலுடையதாய், எத்துணை அமைதியுடைய தாய், எத்துணை ஒளிவிளக்கம் அருள் விளக்கம் வாய்ந்த தாய்த் திகழ்ந்திருத்தல் வேண்டும்! அருள் ஒளி வயத்தராய் நின்று அவர் வழிபட்டுவந்த ஒளியுருவும், அதனையொத்த சிவலிங்க வடிவுமே பிறப்பிறப்பில்லா முதல்வனை வழி படுதற் கியைந்த உண்மை வடிவங்களாகும், இறைவற் குண்மையான இவ்வருட் குறி வடிவைவிட்டு, இறைவனுண் மைக்கு மாறான வடிவுகளை அவரவர் தத்தம் மனம்போன வாறெல்லாம் வகுத்து வைத்துக் கொண்டு வழிபடுவராயின், அவர் இருளுலகம் புகுவரென ஈசாவாசியோபநிடதம் (9) புகலுதலாற், சிவலிங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/262&oldid=1591232" இலிருந்து மீள்விக்கப்பட்டது