உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

❖ ❖ மறைமலையம் - 27

வேள்விக்குழிக்கு அறிகுறியாகவே வட்டக்கல் வடிவும், அதில் வளர்த்த அனற்பிழம்புக்கு அறிகுறியாகவே அது போல் நீண்டு குவிந்ததொரு கல்வடிவும் வகுத்து, அவை யிரண்டையும் பொருத்திய சிவலிங்கத்தினெதிரே, முற் காலத்து ஆரிய வேள்விக்களத்தில் வெட்டுண்ட எருதுக்கு அறிகுறியாகவே எருதுவடிவான நந்தியை நிறுத்தி, அவ் வெருது வெட்டுண்ட பலிமேடைக்கு அறிகுறியாகவே அதனையொத்த பலி பீடத்தை எழுப்பிச் சிவபிரான்றிருக் கோயில் அமைத்தன ரென்க.

பண்டை நாளில் மலைகளின் மீதிருந்த தமிழ் முன் னோர்கள் முத்தீவேட்டலைக் கைவிட்டபின் அவற்றின் மேல் எடுப்பித்த திருக்கோயில்களே மிகப்பழையன, அவை: திருப்பரங்குன்றம், திருக்கொடுங்குன்றம், திருக்கழுக் குன்றம், திருக்கொடிமாடச் செங்குன்றம் திருவண்ணா மலை, திருவீங்கோய்மலை, திருநொடித்தான்மலை முதலியன.

பின்னர் மலைகளினின்றுங் கீழிறங்கிக் காடுகளில் வைகி வாழ்ந்த ஞான்று அவர்கள் அமைப்பித்த திருக் கோயில்கள், மலைக்கோயில்களுக்கு அடுத்தபடியிற் பழைமையுடையன வாகும், அவை: திருவாலங்காடு, திருமறைக்காடு, திரு

வண் காடு, திருச்சாய்க்காடு, திருப்பனங்காடு திருக்கச்சிநெறிக் காரைக்காடு முதலியன வாகும்.

அதன்பிற் காடுகளைவிட்டு அகன்று உயிர்வாழ்தற் கினிய இளமரக்காக்களிலும் பொழில்களிலும் புகுந்து உறைந்த ஞான்று அவர்கள் கட்டுவித்த திருக்கோயில்கள், கானகக் கோயில்களுக்கு அடுத்தபடியிற் பழைமை வாய்ந்தன வாகும், அவை: திருக்கடம்பு, திருத்தில்லை, திருவானைக்கா, திருக்குரக்குக்கா, திருக்கோடிகா, திருக் கோலக்கா, திருநெல்லிக்கா, திருவாலம்பொழில் முதலாயின.

அதன்பின் உழவுத் தொழிற்கேற்ற வளவிய மருதநிலம் புகுந்து அவர்கள் நிலைபெற்ற நாகரிக வாழ்க்கை யுடையராய பிற்றைஞான்று எடுப்பித்த திருக்கோயில்கள் மேற் காட்டிய கோயில்களுக்குப் பிற்பட்ட பழைமை யுடையனவாகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/261&oldid=1591231" இலிருந்து மீள்விக்கப்பட்டது