உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம

  • சைவ சித்தாந்த ஞான போதம்

235

பேருண்மை முறையினையே தவமாச் செல்வரான தாயுமான அடிகள்,

தானான தன்மயமே யல்லால் ஒன்றைத்

தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே

போனாலுங் கர்ப்பூர தீபம் போலப்

போயொளிப்ப தல்லாது புலம்வே றின்றாம் ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற

ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும்

ஆனாலும் இதன்பெருமை எவர்க்கார் சொல்வார் அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்

என்றும்,

ஒருவனவன் யானைகெடக் குடத்துட் செங்கை ஓட்டுதல்போல் நான்பேதையுப்போ டப்பை மருவவிட்டுங் கர்ப்பூர மதனிற் றீபம்

வயங்கவிட்டும் ஐக்கியமுன்னி வருந்திநிற்பேன் அருளுடைய பரமென்றோ அன்று தானே

யானுளனென் றும்எனக்கே யாண வாதி பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப்

பேசியதன் றேயருணூல் பேசிற் றன்றே

என்றும் ஆகார புவனஞ் சிதம்பர ரகசியத்தில், (22, 29) அருளிச் செய்திருத்தல் கண்டுகொள்க.

இங்ஙனமெல்லாம் போந்த திருக்கோயில் மெய்ப் பொருள் விளக்கமுறை ஆசிரியர் திருமூலர் காலத்திற்குச் சிறிது முன்னே துவங்கிப் போந்த தன்றி அதற்கு முற்பட்ட காலத்தே வழங்கிய தன்றென்பது, பண்டைச் செந்தமிழிலக் கியங்களில் அது காணப்படாமையாற் றெற்றெனத் துணியப் படுகின்றது,.

மற்றுப், பண்டை நாளில் ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை வேள்வியை அடியொடு நிறுத்தித், திருக் கோயில் எடுப்பித்த தொல்லாசிரியர் முத்தீவேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/260&oldid=1591230" இலிருந்து மீள்விக்கப்பட்டது