உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

-

மறைமலையம் - 27

தமிழ்ச் சான்றோர்கள் திருக்கோயிலமைப்பினை மிக வுயர்ந்த மெய்யறிவு முறையிலே வைத்துத் திருப்பிவிட லாயினர், இங்ஙனம் உயர்ந்த முறையில் வைத்துத் திருக் கோயிலமைப்பு விளக்கப்பட்ட உண்மையினை, இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னிருந்த அருந்தவ மாமுனிவராகிய ஆசிரியர் திருமூலர்,

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்

ஆய பசுவும் அடலே றெனநிற்கும்

ஆய பலிபீடம் ஆகுநற் பாசம்

ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்க்கே (செய்யுள் 2411)

6

யாள

என்று தமது திருமந்திர நூலில் அருளிச் செய்தவாற்றால் நன்கறிந்துகொள்க. திருக்கோயிலில் றைவனைத் தொழுதற்குச் செல்லும் ஒருவர் பலிபீடத்தினருகே சென்றதுந் தமக்குள்ள ‘யான்’ எனது' என்னும் இருவகைச் செருக் கினையும் வெட்டிப் பலியாகச் செலுத்துதற்கு அடை மாகவே அவர் அதன் பக்கத்தே நீளக்கிடந்து வணங்கு தலாகும், அங்ஙனம் வணங்கிய அவரது உயிர் அதனால் அவ்விருவகைச் செருக்குந் தீர்ந்து தூயதாகி இறைவனை நோக்கிச் செல்லும் அடையாளமாகவே பசுவின் வடிவின தான நந்தி சிவலிங்கத்தினெதிரே நிறுத்தப்பட்ட தாகும், அந்நந்தியும் அந்நந்தியினெதிரே நிற்குஞ் சிவலிங்கமும் கல்வடிவிற் காணப்படினும், அச்சிவலிங்க வடிவு தூய ஒளி யுருவில் முனைத்து நிற்குஞ் சிவமாமெனவும், அவ்வொளி யுருவில் ஒன்றி இரண்டறக் கலக்குந் தூயவுயிர் அதிற் கரைந்து கலக்குமாறு இதுவாமெனவுங் காட்டுதற் பொருட்டே இறைவனைத் தாழப் போவார் முன்னிலை யிற் கருப்புர வொளிகாட்டும் முறையினைத் தமிழ்ச் சான்றோர் வகுக்க லாயினர். கருப்புரந் தூய வெண்ணிறத் ததா யிருத்தலின், இருவகைப் பற்றும் விட்டு இறைவனோ டொன்றி இரண்டறக் கலக்கப் போந்தூயவுயிர்க்கு அஃது அடையாளமாயிற்று; அக்கருப்புரத்திற் பற்றிய நெருப் பொளி அக்கருப்புரத்தைக் கவர்ந்து கரைத்துத் தனதாக்கும் நிலை, ஒளியுருவினனான இறைவனை அத்தூயவுயிரைப் பற்றித் தனதாக்கும் நிகழ்ச்சிக்கு அடையாளமாயிற்று, இவ்வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/259&oldid=1591229" இலிருந்து மீள்விக்கப்பட்டது