உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

233

எல்லாம்வல்ல முழுமுதற் பொருள் சிவம் ஒன்றேயாதலையும் ஆரியரால் வணங்கப்பட்ட இந்திரன், வருணன், சோமன், பிரமன், விண்டு முதலியோரெல்லாம் பிறந்திறக்குஞ் சிற்றுயிர்களே யாதலையும் பகுத்தறிவு கூடாப் பொதுமக்கட்கு நன்கு தெருட்டுதற் பொருட்டு, அவர் அறிதற்கு எளியவான புராணக் கதைகள் சிலவும் புனைந் துரைப் பொருளாய்ப் படைத்தெழுதலாயினர்.

இன்னும், இவற்றுடன் அமைதி பெறாமல், உயிர்க் கொலைக்கும் வெறியாட்டுக்கும் இடனாக ஆரியராற் றிரிபு படுத்தப்பட்ட தீவேட்டலையே முற்றும் ஒழிப்பான் வேண்டித், தீ வளர்க்குங் குழிக்கு அறிகுறியாக ஒரு வட்டக்கல் வடிவும், அக்குழியில் வளர்க்கப்படுந் தீயினுக்கு அறிகுறியாகக் குவிந்து நீண்டதொரு கல்வடிவும் வகுத்து அவை யிரண் டனையும் ஒருங்கு பொருத்தி நிறுத்திய சிவலிங்கத்தினெதிரே முன்னே வேள்வியில் வெட்டக் கொணர்ந்த மாட்டினுக்கு அறிகுறியாக ஒரு நந்தியுருவி னையும் அமைத்து, முன்னே அம்மாட்டினை வெட்டிய பலி மேடைக்கு அறிகுறியாக அந்நந்தியுருவின் பக்கத்தே ஒரு பலிபீடத்தினையும் எழுப்பிச் சிவபிரான் றிருக் கோயில்களை ஆங்காங்கு எடுப்பிக்க லாயினர்.

இவ்வாறு சிவலிங்க அருட்குறியும் அதனெதிரே நந்தியுருவும் அதன் பின்னே பலிபீடமும் அமைத்துத் திருக் கோயில்கள் உண்டாக்கிய பின், முன்னே ஆரியர் செய்து போந்த வெறியாட்டு வேள்வியும் அவற்றின்கண் நடந்த உயிர்க்கொலையும் நினைவில் வராமைப்பொருட்டு, அம் மூன்று குறிகளும் மூன்று மெய்ப் பொருளடையாளங் களாக வகுக்கப்பட்டன வென்று அவை தமக்கு விழுமிய மெய்ப் பொருளுங் கூறலாயினர், இறைவன் றிருவடை யாளமே சிவலிங்கமாமெனவும், இறைவனல்லாத சிற்றுயிரின் அடை யாளமே நந்திவடிவாமெனவும், அவ்வுயிரினாற் கழிக்கப் பட்ட அறியாமையாகிய மலமே பலிபீடமா மெனவும் நன்கு விளக்கிப் பதி, பசு, பாச உண்மையினை அறிவிக்கும் பொருட்டே சிவலிங்கமும் நந்தியும் பலிபீடமும் அமைத்த திருக்கோயில்கள் எடுக்கப்பட்டன வென்று பண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/258&oldid=1591228" இலிருந்து மீள்விக்கப்பட்டது