உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் – 27

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்

உடல்சுவை யுண்டார் மனம்

(குறள் 253) என்னுந் தெய்வத் திருக்குறள் கூறியாங்கு, ஊன்சுவையிற் பழகிய ஆரியர் தாஞ் செய்துபோந்த உயிர்க்கொலை வேள்வியினைச் சிறிதும் விடாராயினர்!

L

கு

அதுகண்ட தமிழந்தணருந் தமிழரசரும் அவ்வுயிர்க் கொலை வேள்விகள் மேன்மேற் றீவினையையே பெருக்கும் எனவும்; எல்லாம்வல்ல ஆண்டவன் மலத்தால் அறிவு மறைப்புண்ட எல்லாவுயிர்களுக்கும் அம்மலமறைப்பினை நீக்கி அவை தமக்கு அறிவும் இன்பமுந் தருதற் பொருட் டாகவே உடம்புகளைப் பேரருளினாற் படைத்துக் காடுத்திருக்க, அவனது அருட்டன்மைக்கு மாறாக அவன் படைத்த அவ்வுடம்புகளைச் சிதைத்து அவ்வயிர்களை அறியாமையிலுந் துன்பத்திலும் அமிழ்த்துதல் அவ்வாண்ட வனுக்குத் தணித்தற்கரிய பெருஞ் சீற்றத்தினை மூட்டுவதா மனவும்; றைவனது அருளியல்பினையும் அதனைப் பெறுதற்குரிய சிற்றுயிர்களாகிய நாம்இப்போதிருக்கும் மருளியல்பினையும் நன்குணர்ந்து பார்த்து, அருளு க் மாறான மருளையெல்லாம் அறவே யொழித்து, எல்லா வுயிர்களிடத்தும் அவனை யொப்ப அருளுடன் ஒழுகி அவன்றன் அருட்பெருந் தன்மையினை ஓவாது நினைந்து நினைந்து கனிந்து கனிந்து உருகுதலால் மட்டுமே அறியாமை தேய்ந்து அருளறிவு நம்பாற் சுடர்ந்தொளிருமெனவும் அதனால் இம்மை மறுமை யிரண்டிலும் இயம்புதற்கரிய இன்பவாழ்க்கையே எல்லா வுயிர்க்கும் வாய்க்குமல்லது துன்பமென்பது சிறிதுந் தலைக்காட்டாதெனவும்; ஆகவே உயிர்க்கொலை வேள்விகளைக் கற்பிக்கும் ஆரிய வேதப் பகுதிகளும் அவற்றிற்கூறிய வாறு செய்யுஞ் சிறு தெய்வ வெறியாட்டுகளுங் கழிபெருந் தீமை பயப்பவாகலின் அவற்றை யருவருத்து விலக்குதலே செயற்பால தெனவும் வற்புறுத்திச் ‘சாக்கியம்’, ‘யோகம்' முதலான அறிவு நூல்களும், ‘ஈச,’ ‘கேந,’ ‘கடம்,’ ‘பிரசிநம்,’ ‘முண்டகம்’‘மாண்டூக்யம்’ ‘தைத்திரீயம் ‘சாந்தோக்யம்’ ‘பிருகதாரண் யகம்’ ‘சுவேதா சுவதரம்’ முதலான உபநிடதங்களும் இயற்றினர். இவற்றுடன் நில்லாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/257&oldid=1591227" இலிருந்து மீள்விக்கப்பட்டது