உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

231

அறிதுயிலிற் செலுத்தி அவர்களை உணர்விழக்கச் செய்து அவர்களுக்குச் சிறிதும் நோய்த்துன்ப மில்லாமலே கழலைக் கட்டிகளையும் பிற வற்றையும் அறுத்து நலப்படுத்தி வருகின்றனர்.

இவ்வருங்கலைப் பயிற்சியில் முற்காலத்தே நன்கு பழகிய நந்தமிழந்தணர்கள், ஆரியர் தம் வெறியாட்டு வேள்விகளிற் கலந்து. அவர்கள் வெட்டும் ஆடு மாடு குதிரை முதலான விலங்குகள் அவர்களால் வெட்டுப்படுதற்குச் சிறிது முன்னரே யுணர்விழந்து வெட்டுப்படுமாறு செய்து, அவை அந் நேரத்தில் அடைய இருந்த பொறுத்தற்கரிய நோய்த் துன்பத்தைப் போக்கி வந்த பேரருட்டிறம் பெரிது! பெரிது! இவ்வாறாக வேள்வியிற் கொல்லப்பட்ட விலங்கினங்கள் ணர்விழந்து நோவின்றி யுயிர் விடுமாறு செய்தமைக்கு இருக்குவேத முதன் மண்டிலத்தின் 142 ஆம் பதிகத்திற் போந்த,

நீ

“நீ தேவர்கள்பாற் செல்கையில் நின் உயிர்வளி நின்னை வருத்தாததாக! கோடரியானது நின் உடம்பை ஊறு படுத்தாத தாக! திறமின்றி விரைந்து வெட்டித் தன்றொழிலிற் பெரிது பிழைபடுங் கொலைஞன் நின்உறுப்புகளைப் பிழைபடப் பிளவானாக! மெய்யாகவே நீ இங்கே இறந்து படுகின்றிலை! நீ ஏதொரு துன்பமும் அடைகின்றிலை! நீ எளிய இனிய வழியால் தேவர்கள் பாற் செல்கின்றனை!” என்னும் உறுதியுரைகளே சான்றாகும். இஞ்ஞான்றும் மக்களையும் பிறவுயிர்களையும் உணர்விழக்கச் செய்யும் அறிதுயில் வல்லார் அடுத்தடுத்துக் கூறி அங்ஙனம் உணர் விழப்பினை (Anaesthesia) வருவிக்கும் உறுதிக் கட்டுரை களோ டொப்ப மேற்காட்டிய பதிகக் கட்டுரைகள் அமைந் திருத்தலுங் கருத்திற் பதிக்கற்பாற்று இவ்வாறாக முன்னிருந்த தமிழ் முனிவர்கள், ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை வேள்விகளில் தாமும் உடன்பாடுடையர் போற் கலந்து நின்று அவர் அவ்வேள்விக் களங்களில் வெட்டி வீழ்க்கும் விலங் கினங்களை வெட்டுண்ணுங் கொடுந் துன்பம் அறியாமல் உணர்விழக்கச் செய்து, சில காலமெல்லாம் அவருடைய வேள்விகளையும் நடாத்தி வந்தனர். வந்து மென்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/256&oldid=1591226" இலிருந்து மீள்விக்கப்பட்டது