உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் - 27

காமல், ஒளி வடிவில் முனைத்து விளங்கும் ஒருமுழுமுதற் கடவுளையே அன்பினாற் குழைந்துகுழைந்துருகி வழிபடும் வாழ்க்கையிலேயே பழகிய தமிழ் மேன் மக்களுக்கு அவ்வாரியர் தங் கொலை புலை யொழுக்கம் பெரியதோர் அருவருப்பினைத் தரலாயின. அதனால் அவர்கள், ‘கொலை புலை கட்குடியில்லாமலே எரியோம்பி வழிபடுக' என்று அவ்வாரிய மக்கட்கு எவ்வளவோ அறிவுரை பகர்ந்து வற்புறுத்தியும் அவர்கள் அவ்வறிவுரைக்குச் சிறிதுஞ் செவி கொடாராய்த் தாம் வேண்டிய வெறியாட்டு வேள்விகள் அயர்தலையே விடாப்பிடியாய்க் கொண்டனர்! அது மட்டுமோ! அவர்கள்தாஞ் செய்யும் வெறியாட்டு வேள்வி கட்குப் பெரும் பொருளுந், தம் வெறியாட்டு வேள்வி களை அழித்தற்கு முனைந்துநின்ற வலிய தமிழரசர்களைத் தடைசெய்யத் தமக்குத் துணையும் வேண்டி யிருந்தமையால், வலிய தமிழரசர்களிலேயே தமது சூழ்ச்சியிற் சிக்குவாரைத் தெரிந்தெடுத்து,அவரை ஏமாற்றி அவர்பாற் பெரும் பொருள் கவர்ந்தும்,அவரைத்தமது வெறியாட்டு வேள்விக்குத் துணை கொண்டுந் தமது கருத்தை நிறைவேற்றி வரலானார்.

ன்படுவார்

இதுகண்ட தமிழ்ச் சான்றோரிற் சிலர், தீங்கற்ற ஏழை விலங்குகளைத் துடிதுடிக்கக் கொன்று, அவற்றின் ஊனை இந்திரன் முதலான ஆவிகளுக்குப் படைக்கும்இரக்கமற்ற வன்செயலை யொழிக்குங் கருத்தினராய்,அவ்வாரியர் அயரும் வெறியாட்டு வேள்விகட்குத் தாமும் உடன்படு போற் காட்டி, முதலில் அவ்விலங்குகளை உணர்வின்றி வெட்டுண்ண வழி பிறப்பித்தார், வெட்டுண்ணப் போகும் விலங்குகளை அத்தமிழ்ப் பெரியார் தம்முடைய கண்களால் உறுத்து நோக்கியுந், தம்முடைய கைகளாற் சிறிதுநேரம் நீளத்தடவியுந், தமது நினைவை ஒருமுகப்படுத்தி அவை உணர்விழந்து இறைவனுலகிற்குச் செல்க!' என்று உரைத்த அளவில், அவை யுணர்விழந்து நிற்ப, அந்நேரத்தில் அவை தம்மை வெட்டி வீழ்த்தற்கு கற்பித்தார். இஞ்ஞான்றும் அறிதுயில் (Hypnotic and Mesmeric sleep) வருவிக்கும் முறையில் நன்கு பழகித் தேர்ச்சி பெற்ற ஆங்கில மருத்துவ ஆசிரியரும் பிறரும், மக்களையும் விலங்குகளையும்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/255&oldid=1591225" இலிருந்து மீள்விக்கப்பட்டது