உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

229

எல்லைக்குப் புறம்பே ஆடுமாடு மேய்த்துக் கொண்டும் அவற்றின் ஊனைத் தின்று கொண்டும் வாழ்நாட் கழித்துவந்த ஆரியர், தாம் இருந்த வ பால் இடங்கள் வரவரக் குளிர்மிகுந்து தாம்இருத்தற்கு இசையாத தன்மையவாய் மாறினமையால், அவைகளை விட்டு நீங்கி, இவ்விந்திய நாட்டின் வடமேற் கெல்லைவழியே இதனுட் புகுந்து, வருந்தி வந்தவரை விருந்தேற்கும் இயல்பினரான பண்டைத் தமிழ்மக்களின் உதவியால் ஊனும் உடையும் இருக்கையும் பெற்று, ஆங்காங்குக் குடியேறி வாழலாயினர்.

ம்

த்

ா ல

அங்ஙனம் வந்துபுகுந்து நிலைத்த ஆரியர், தம்மை வரவேற்ற தமிழ்மக்கள் கல்வியிலும் ஏனைச் செல்வ வளங்களிலும்நிரம்பினவராய் முத்தீவேட்டு வருதலைக் கண்டு அம்முத்தீ வேட்டலின் உண்மையுங் கருத்தும் அறிந்து கொள்ளாமலே, தாமும் அவர்போல் நெருப்பினை வணங் கினால் தமக்கும் அவர் போற் கல்வியுஞ் செல்வமும் உண்டா மனக் கருதி,அவரினும் மிகுதியாய் அழலோம்பு தலை மேற்கொண்டார். இவ்விந்திய நாட்டிற் புகுமுன்னரே ஆரியமாந்தர் ஆடு மாடு குதிரை முதலான விலங்கினங் களைக் கொன்று அவற்றின் இறைச்சியை நிறையத்தின்று, சோமப்பூண்டில் இறக்கிய ஒருவகையான கள்ளை மிகுதியாய்ப் பருகிவந்த பழக்கமுடையவர்களாதலால், ந்நாட்டுட் புகுந்து வைகிய பின்னும் அப்பழக்கத்தை விடமாட்டாராய்த், தம் ஆரியப் பிரிவினர்க்குத் தலைவராய் இருந்து இறந்துபட்ட ‘இந்திரன்’ ருணன்’ ‘மித்திரன் அரியமான் முதலானவரின் விகளை வழிபடுதல் நினைந்து, எரி வளர்த்து, ஆடு மாடு குதிரை முதலிய விலங்கு களை வெட்டி அவற்றின் ஊனையுஞ் சோமப் பூண்டின் கள்ளையும் அதன் முன்னே வைத்துப் படைத்துப் பின்னர்த் தாமுந் தம்மினத்தவருமாக அவற்றை யெடுத்தருந்திக் களித்து வந்தனர்.

உயிர்க்கொலையும், ஊனுணவுங், கட்குடியும் இல்லா மற், காய், கனி, கிழங்கு, வித்துக் கீரை முதலியவைகளையே உணவாகக் கொண்டு, பாலையும் நீரையுமே பருகிப் பிறந்திருக்கும் மக்களையும் பிற சிற்றுயிர்களையும் வணங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/254&oldid=1591224" இலிருந்து மீள்விக்கப்பட்டது