உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

❖ மறைமலையம் - 27

ஆற்றோரங்களிலும் ஏரியோரங்களிலும் குடியேறி உயிர் வாழத் துவங்கியபின், தாம் முன்னர் மலைமேற் செய்து போந்த அனல் வழிபாட்டை மரச்செறிவுகளின் கீழ்ச் செய்து வரலாயினர், நாளேற நாளேறப் பகலவனிலும் நிலவோனிலும் றைவனை வைத்து வணங்கும் வணக் கத்தை மெல்ல மெல்லக் கைந்நெகிழ விட்டுத் தீவடிவில் வைத்து இறைவனை வணங்கும் முறையினையே மிகுதியாய் கடைப்பிடிக்கலா யினர், பகலவனும் நிலவோனும் வானும் இறை வற்கு இறை வற்கு விழுமிய ஒளியுடம்புகளேயாயினும், அவை எட்டாத் தொலைவி லிருத்தலால் அவை தம்மைத்தம் அருகே யிருத்தித், தாம் உட்கொள்ளும் உணவை அவை தமக்கு ஊட்டவுந், தாஞ்சூடும் நறுமலர் மாலைகளை அவை தமக்குச் சூட்டவும், இன்னும் அங்ஙனமே தம் அன்பின் அடையாளங்களாக அவை தமக்குச் செய்ய வேண்டுவன வெல்லாஞ் செய்யவும் ல்லாமையானும், பகலவனும் நிலவோனும் விளங்கா நள்ளிருளிரவில் தீயினொளியே தமக்கின்றியமையாத தொன்றாய்க் காணப்பட்டமையானுந், தீயொன்றே தாம் வேண்டும் போதெல்லாந் தம்மருகே வளர்த்துக் கொள்ளுதற் கியைந்த எளிமையுடைத்தாய், அளக்கலாகாத் தன் அரும் பெருந் தன்மைகளை யொடுக்கித் தன்னைக் குழைந்துருகி நினையும் ஏழையடியார்க்கு எளியனாய்வந் தருள்வழங்கும் றைவன்றன் அருட்பெருந் தன்மையினைத் தன்னகத்தே ளங்கக்காட்டுந் தகைத்தாய்த் துலங்குதலானும் இடை காலத்துச் சான்றோர்கள் இறைவனை நெருப்புருவில் வைத்து வழிபடுதலையே ரும்பான்மையாய்க் கைப்பற்றி யொழுகலாயினர். அதனால், அவர்கள் குடியேறி வைகிய இடங்களிற் செறிந்த சோலைகள், இளம் மரக்காக்கள், தோட்டங்கள், தோப்புகள், பொழில்களி லெல்லாம் மரங்களின் கீழ்க் குழிகள் அகழ்ந்து அவற்றின் கண் எரியோம்பி இறைவனை வழுத்துதலும் வாழ்த்துதலும் மேற்கொண்டார்.

டைக்

இவ்வாறு இவ்விந்திய நாட்டில் வடக்கே இமயமலை முதல் தெற்கே பொதியமலை வரையிலிருந்த தமிழ் மக்களெல்லாம் முத்தீயோம்பி இறைவனை வழிபட்டு வந்த பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே, இந்திய நாட்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/253&oldid=1591223" இலிருந்து மீள்விக்கப்பட்டது