உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

227

வனையும் இராக்காலத்தில் நிலவோனையும், நிலவோனும் இல்லாத இராக்காலத்தில் தீயினையும் வணங்கி வரலானார்கள். இது, பாரதப்போர் நிகழ்ந்த காலத்திருந்த வரான முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய “மண்டிணிந்த நிலனும்” என்னும் பாட்டிற்போந்த "மாப்பிணை, அந்தியந் தணர் அருங்கடன் இறுக்கும், முத்தீ விளக்கில், துஞ்சும், பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே” (புறம் 2) என்னும் அடிகளால் நன்கறியப்படும், இந்நிலவுலகின்கண் உள்ள எல்லா மலை களைப் பார்க்கிலும் மிக்குயர்ந்ததாகிய இமய மலையின் ஒரு கொடு முடிக்கண் உளதான திருக்கைலாய L மலையிற் சிவலிங்க வடிவந்தொன்று தொட்டு வைத்து வணங்கப் படுதலும், அங்ஙனமே இத்தென்றமிழ் நாட்டிலும் மிகப் பழைய காலந்தொட்டே 'திருப்பரங்குன்றம் 'திருவேங்கடம்’, ‘திருக்கழுக்குன்றம்’, ‘திருக்கொடிமாட செங்குன்றூர்’ முதலான உயர்ந்த மலைகளின் மீதெல்லாஞ் சிவலிங்கம் வைத்து வழிபாடு செய்யப்படுதலும் இவ்வுண்மை யினை நன்கு விளக்கும்.

பழைய உபநிடதமாகிய சுவேதாசுவதரமும் (3,5) "உருத்திரனே! சிவ வுருவினதாய் அச்சமில்லதாய்த் தூய்மையளிப்பதாய் உள்ள நின்றிருக்கோலத்தோடு, எல்லா அருளும் நிரம்பிய அக்கோலத்தோடு, மலைமீதிருந்தவாறே நலந்தருவோனே! எம்மைக் கடைக்கணித்தருள்க!” 5 எனச் சிவ பிரானை விளித்து வழுத்தும்உரை கொண்டும் அவன் மலைமிசை வைத்துப் பண்டை நாளில் வணங்கப்பட்ட மை தெள்ளிதிற் புலனாம். பழைய விவிலிய நூலிலும், ஆபிரகாம் என்னும்முனிவர் தம்மகனை இறைவனுக்குப் பலியாக இடுதற் பொருட்டு ஒரு பொருப்பின்மிசைக் கொண்டு சென்று ஆண்டுத் தீ வேட்டமை நுவலப்படுதல் காண்டும் பண்டிருந்த மேன்மக்கள் மலைமேல் தீ வளர்த்து இறைவற்கு வழிபாடு ஆற்றினமை தெளியப்படும்.

6

இனி, அத்துணைப் பழைய காலத்திற்குப் பின், மலைமீதுறைந்த மக்களிற் பெரும்பாலார் கீழிறங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/252&oldid=1591222" இலிருந்து மீள்விக்கப்பட்டது