உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

❖ ❖ மறைமலையம் – 27

6

னுடம்பினோ டொப்பவகுத்து, அம்முனிவன் தனதுடம்பி னகத்தே இறைவனை வழிபடு முறையோ டொப்பப் புறத்தே அத்திருக்கோயிலினுள்ளும் எல்லாருஞ் சென்று இறைவனை வழிபடுமுறையும் ஆகிய ய இவையெல்லாம், ஆசிரியர் திருமூலர் இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன் அருளிச் செய்த திருமந்திர நூலிலாதல், அதற்கும் முந்நூறாண்டுகட்கு முன்னே, அஃதாவது இற்றைக்கு ஆயிரத்து எழுநூறு ஆண்டு கட்கு முன்னே மணிமொழிப் பெருமான் அருளிச் செய்த திருவாசகத் திருக்கோவை யாரிலாதல், அதற்கும் முன்னே, அஃதாவது, இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னே இயற்றப்பட்ட பண்டைத் தண்டமிழ் நூல்களிலாதல் ஒருசிறிதுங் காணப் படாமை யால், இம்முறைகளெல்லாம் நம்சைவ சமயா சிரியன்மார் காலத்திற்குப் பன்னெடுங்காலம் பின்னே அஃதாவது நம் சைவ சித்தாந்த முதலாசிரியர் மெய்கண்ட தேவர் காலந் தொட்டே வழங்கி வரலாயின வென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோற் றெள்ளிதின் விளங்கா நிற்கின்றது.

அற்றேல், ஆசிரியர் திருமூலர் காலத்தும் அவர்க்கு முற்பட்ட தமிழ்ச்சான்றோர் காலத்தும் வழங்கப்பட்டு வந்த கடவுள் வழிபாட்டு முறைதான் யாதோவெனின்; அப்பழைய முறைனையுஞ் சிறிது விளக்குதும். நம் பண்டைச் செந்தமிழ்த் தாபதர், எல்லா உலகங்களிலும் எல்லா உயிர் களிலும் ஊடுருவி மறைந்து நிறைந்து நிற்கும் எல்லாம் வல்ல

க்

றைவன், சிற்றுயிர்களாகிய நாம்தன்னைக் கண்ணார கண்டு வணங்கியுய்தலை வேண்டிப் பெருகிய அருளால், ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளி வடிவுகளில் முனைத்து விளங்கித் தோன்ற, அவ்வியல்பினை விளங்க அறிந்தபின், முதலில் அம்மூன்று ஒளி வடிவுகளில் வைத்தே றைவனை நேரே வழிபட்டு வரலாயினர். பண்டை மக்களில் அகக்கண் திறக்கப்பெற்றுப் பேரறிவுடையராய் வயங்கிய சான்றோர்களும் அவர்களைச் சூழ்ந்திருந்த அம்மக்களும் மலைகளையே இருப்பிடமாய்க் கொண்டு உயிர் வாழ்ந்தார் களாகலின், அவர்கள் தாமிருந்த மலைகளின் முகடுகள் மேற்சென்று அங்கிருந்தபடியே பகற்காலத்திற் கதிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/251&oldid=1591221" இலிருந்து மீள்விக்கப்பட்டது