உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

225

மருவா னந்தம் விஞ்ஞானம்

மனோபி ராணன் அன்னமயம் உருவாந் தன்மை உண்டாய்முன்

னொன்றுக் கொன்று சூக்குமமாய் வருமாம் அன்ன மயம்பற்றி

மாயை முதற்கா ரணமாகும் அருவாய் ஆன்மா ஐங்கோசத்

தார்ப்புண் டவற்றி னகம்புறமாம்

என்னுஞ் சிவஞான சித்தியார்ச் செய்யுளால் இனிது விளங்க வைத்தருளினார். இவ்வாறு நமதுடம்பு ஒன்றினுள் ஒன்றாக ஐந்துடம்புகளுடன் கூடியதாய் இருத்தல் போல நமதுடம்பை யொப்ப ஆக்கப்பட்ட சிவபிரான் திருக்கோயில்களும் ஐந்து சுற்றுகள் உள்ளனவாக வகுத்து அமைக்கப்பட்டிருக் கின்றன. னி, நம்முடம்புகள் ஐந்தையும் வேறொரு வாற்றால் மூன்றாகக் கொண்டு பருவுடம்பு, நுண்ணுடம்பு, காரண வுடம்பு எனவும் மெய்ந்நூல்கள் வழங்கு முண்மை,

6

சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச்

சாக்கிர முதலா யுள்ள அவத்தையுட் டங்கி யெங்கும் போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவம் ஆக்கியும் பலன்க ளெல்லாம் அருந்தியும் நிற்கு மான்மா.

என்னுஞ் சிவஞானசித்திச் செய்யுளால் அறியக்கிடத்தலிற்,

பெரும்பான்மையான சிவபிரான் றிருக்கோயில்கள் மூன்று சுற்றுகள் உடையனவாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன.

இங்ஙனமாக இந்நிலவுலகிற் சிறந்த இவ்விந்திய நாட்டை ஓருடம்பாகக் கருதி, அதனுள் மூலத்திற் றுவங்கித் தலையுச்சி வரையில் உளவாக வைக்கப்பட்ட இடங்களில் இறைவன் திருவுருவினை நிறுத்தி வழிபடுமுறையும், இனி இவ்விந்திய நாட்டினுள்ளுஞ் சிறந்த தென்றமிழ் நாட்டை ஓருடம்பாகக் கருதி அதன்கண்ணும் மூலத்திற் றுவங்கி மிடறுவரையில் உளவாக வைக்கப்பட்ட இடங்களில் இறைவன் றிருவுருவினை நிறீஇ வழிபடுமுறையும், இனி ஒவ்வொரு சிவபிரான் றிருக்கோயிலையும் ஒருதவ முனிவ

னி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/250&oldid=1591220" இலிருந்து மீள்விக்கப்பட்டது