உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மறைமலையம் - 27

சேர்வதாகும்; நெஞ்சத்தாமரை முகிழ் இறைவற்கு இருப்பிட மாகலின், அதுபோல் இறைவற்கு ஊர்தியாகிய நந்தியை வணங்கிக் கொண்டு, மிடற்றினூடே செல்வது போல், இறைவன் எழுந்தருளியிருக்குங் கருவறை வாயிலினூ டே நுழைந்து, புருவ நடுவிற்கு நேரே தலையின் நடுவணதான சிற்றறையினுட் சென்றடைதல் போல் அக்கருவறை நடுவிற் சேர்ந்து, அத்தலைநடுச் சிற்றறையினுள் விளங்காநின்ற ஒளியுருவிற் சிவபிரானை வழிபடுதல்போல், அக்கோயிற் கருவறையில் அவ்வொளிப் பிழம்பின் அடை யாளமாக நிறுத்தப்பட்டிருக்கும் அருட்குறியை வணங்கி வழிபட்டு நிற்றலாகுமென்க.

ங்ஙனந் தவத்தான் மிக்கோர் தம்முடம்பினுள்ளே இறைவனை மூலத்திற் றுவங்கி மேன்மேல் ஏறி வழிபடு முறையில் வைத்து, அவரது தூய தவவுடம்பின் அமைப் பினை யொப்பச் சிவபிரான் றிருக்கோயில்கள் வகுத்து அவற்றினுள்ளே அவர் இறைவனை வழிபடுமாறுந் தெற் றென எவர்க்கும் விளங்குமாறும் ஆன்றோர் விளக்கிக் காட் டினமை காண்க.

இனி,

உடம்புகளெல்லாம் வெளிப்பார்வைக்கு எழுவகை முதற்பொருள்களால் ஆக்கப்பட்ட பருப்பொருள் போற் றோன்றினும், ஒவ்வோருடம்பும் அகத்தே வெவ்வேறு நான்குடம்புகளோடு ஐவகை யுடையதாகும், வெங்காயம் என்னுங் கிழங்கு வெளிநோக்கில் ஒன்று போற்றோன்றினும், அஃது உரிக்க உரிக்கப் பற்பல தோல்களையுடை தாமாறு போல நம்மனோருடம்பும் அகத்தேயுள்ள வெவ்வேறு நான்குடம்புகளோடு ஐவகையுடையதாய் அமைக்கப் பட்டிருக்கின்றது அவை: உணவுடம்பு, வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு என்பனவாகும் ; இவற்றை வட நூலார் முறையே அன்னமயகோசம், பிராண மயகோசம், மனோமயகோசம் விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என வழங்காநிற்பர். இவ்வாறு ஒவ்வோ ருடம்பும் ஐந்துடம்புகள் தொக்க தொகையாய் இருத்தலை ஆசிரியர் அருணந்திசிவனாரும்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/249&oldid=1591219" இலிருந்து மீள்விக்கப்பட்டது