உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

223

நிறுத்திய சிவலிங்க அருட்குறியிலே முதல் வனை வழிபட்டு வருதல்போல, நமதுடம்பின் அகத் துளவான முதன்மையான ஏழு அல்லது ஆறிடங்களில் விளங்காநின்ற இறைவன் றன் ஒளி வடிவினை நினைந்து வழிபாடு ஆற்றுதலும் இன்றியமை யாததாதல் காண்க.

இனிப் பிற்றைஞான்றைச் சிவபிரான் றிருக்கோயில்கள் நமதுடம்பின் அமைப்பினையொப்ப வகுக்கப்பட்டவாறும் ஒரு சிறிது விளக்குவாம். மக்களுடம்பினை மேற்கே தலையுங் கிழக்கே காலுமாகக் கிடத்தி வைத்தாலென, இத்திருக் கோயில்களிற் பெரும்பாலனவும் அமைத்து வைக்கப் பட்டி ருக்கின்றன, கிழக்கேயுள்ள கால்கள் இரண்டுங் கோபுரங் களாகும்; அக்கால்களில் டைவழியே கோபுரங் களின் வாயிலாகும்;

ன்

அக்காலிரண்டன் ஊடே சென்று எருவாய் கருவாய்க் கிடையே யுள்ள மூலத்திற் சென்று சேர்வதே, கோபுர வாயிலினூடே சன்று மூத்த பிள்ளையாராகிய யானை முகக் கடவுளின் இருக்கையைச் சென்று சேர்வதாகும்; மூலத்தே பாம்பு சுருண்டாற் போல இருக்குங் குண்டலி யுருவினை வணங்குதே, அம் முதலிருக்கையில் ஓங்கார வடிவாய் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை வணங்குவதாகும்; அம்மூல குண்டலியை யெழுப்பி அதனுடன் சென்று, கொப்பூழ்க்குக் கீழே மிக நுண்ணிய ஒலிகள் மயில் முட்டை யுட் பலநிற நீர்போல் நிற்குங் கீழ் வயிற்றினுட் சேர்ந்து, ஆண்டுள்ள இறைவனை இறைஞ்சுவதே. அப்பிள்ளையார் ருக்கையைக் கடந்து சன்று மயில்மேல் அமர்ந்திருக்கும் முருகப்பிரான் இருக்கையை அடைந்து அவனை வணங்குவதாகும்; அக்கொப்பூழின் கீழ்வயிற்றினை அந்நுண்ணிய ஒளியுடன் கடந்து மேலேறி மேல்வயிற்றுனுட் சென்று ஆண்டுத் தன் இருவகைச் செருக்கினையும் ஒழித்து இறைவன் றிருவருட்கீழ்நிற்றலே, அம்முருகப்பிரா னிருக்கை யைக் கடந்து பலி மேடையின் அடிக்கீழ் விழுந்து வணங்கு வதாகும்; இனி, அம்மேல் வயிற்றினையுங் கடந்து மேலேறி நெஞ்சத்தாமரையிற் சென்று சேர்வதே, பலிமேடையைக் கடந்து எருது வடிவாய் அமர்ந்திருக்கும் நந்தியைச்

பன்னிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/248&oldid=1591218" இலிருந்து மீள்விக்கப்பட்டது