உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் – 27

னி, இதன்மேலுளதாகிய நெஞ்சத்தாமரையின் கண்ணதாம் வெளியிலே அசையா நிற்கும் ஒரு பெருவிரல் அளவினதான ஒளிப்பிழம்பிலே இறைவன் விளங்கி நின்று இயக்கும் இயக்கத்தையே திருவம்பலக் கூத்து எனத்

தவநூல்கள் நுவலுமாறும்,அக்கூத்து நிகழும் இ L மே அகத்தும் புறத்துந் திருச்சிற்றம்பலமென வழங்கப்படுமாறும் முன்னமே விளக்கிக் காட்டினாம்,

இனித், 'திருக்காளத்தி'யென்பது எல்லாம் வல்ல றைவன் காற்றின்கண் முனைத்துநின்று அதனை இயக்கு மாற்றைக் காட்டுதற்கென்று அமைக்கப்பட்ட திருக்கோயி லாகும், அஃதங்ஙனம் புறத்தே அமைக்கப் பட்டாற் போலவே, நமதுடம்பின் அகத்தும் மிடற்றின் கண்ணே இயங்காநின்ற காற்றினிடத்து இறைவன் விளங்கி நிற்றலின் மிடற்றின் மேற்பகுதியே சிவபிரான் உள்நிற்குந் திருக்காளத்தி யாகும். வளியேயிருந்து உள் உள்ளும் உள்ளேயிருந்து வெளியும் முறையே யிழுத்து விடப்படும் உயிர்வளியினியக்க மில்லையேல் நமதுடம்பு ஒருசிறிது நேரத்தில் அழிந்துபடுதல் திண்ணமேயாம். ஆகவே, உயிர்வளி இயங்கும் மிடற்றினைத் திருக்காளத்தி யாகக் கூறியதுபொருத்தமுடைத்தேயாம்.

இனிக், 'காசி' யென்பது கங்கை, யமுனை, சரச்சுவதி என்னும் மூன்றியாறுகளும் ஒருங்கு கூடுமிடத்தே புறத்தில் அமைக்கப்பட்டாற்போல, அகத்தில் ை பிங்கலை சுழுனையென்னும் நரம்புக்குழாய்கள் மூன்றும் ஒருங்கு கூடும் இட இடமாகிய புருவ நடுவில் அக்காசியுளதாதலை முன்னரே விளக்கிக் காட்டினாம்.

தில்லைக்கு வடக்கேயுளதாகிய திருவண்ணாமலையை அதற்குத் தெற்கே யுளதுபோற் கொண்டு மேல் வயிற்றுளே திருவண்ணாமலையையும் அதற்கு மேல் நெஞ்சத் தாமரையிற் றில்லைச் சிற்றம்பலத்தையும் வைத்துரைத்தது மட்டும்

பொருத்தமாகாமை உணரற்பாற்று.

இங்ஙனமாகப் புறத்துளதானஇவ் விந்திய நாடென் னும் உடம்பின் முதன்மையான ஏழு அல்லது ஆறிடங்களில் ஏழு அல்லது ஆறு திருக்கோயில்கள் எடுப்பித்து, அவற்றின்கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/247&oldid=1591217" இலிருந்து மீள்விக்கப்பட்டது