உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

தீனிப்பைக்குச்

6

221

ள்

சென்று கொண்டே யிருத்த லானும், அதனொடு பித்தப்பையிலுள்ள பித்த நீரூந் தீனி ப்பையினு வந்து சேர்ந்து அவ்வுணவைச் செரிக்கச் செய்தலானும், இவ்விருவகை நீரும் போதாவிடின் விடாய் எடுப்ப மேலும் மேலும் நாம் தீஞ்சுவைத் தெண்ணீர் பருகிக் கொண்டே யிருத்தலானுங் கொப்பூழின் கீழிருக்குந் தீனிப்பை எந்நேரமும் நீர் நிறைந்ததாகவே இருக்குமாகலின் அதனை அகத்துள்ள திருவானைக் காவாகக் கோடல் சாலப் பொருந்துவதே யாம்

என்க.

இனித், 'திருவண்ணாமலை' என்பது இறைவன் நெருப் புருவாய்த் தோன்றியதோ ரிடமாதல் பழைய வரலாறுகளால் அறியப்படுவதொன்றாகும். இங்ஙனம்இறைவன் நெருப்புரு வாய் நின்ற இயல்பினை ஆசிரியர் திருமூலரும்,

பிரமனும் மாலும் பிரானே நான்என்னப் பிரமன் மால் தங்கள் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரன்அடி தேடி அரற்றுகின் றாரே

ம்

எனத் திருமந்திரத்தில் (372) அருளிச் செய்திருத்தல் காண்க. நமதுடம்பின் வயிற்றிலுள்ள தீனிப்பை மேற்சொல்லியவாறு நீர் நிறைந்ததா யிருப்பினும் அதன் மேற்பகுதி சூடுடையதாக அமைந்திருக்கின்றது, ஏனென்றால், வெளியே உணவு வெந்து நன்றாய்ப் பதப்படுதற்கு நீரும் நெருப்பும் இன்றியமையாது வேண்டப் படுதல் போல, உள்ளே இரைப்பையிற் சென்ற உணவும் இன்னும் நன்றாய்க் குழையவெந்து கூழாகிச் சந்நீரிற் கலத்தற்கு நீரொடு நெருப்பும் இன்றி யமையாது வேண்டப்படுகின்றது. அதனாற், றீனிப்பையின் மேற்பகுதி எஞ்ஞான்றும் அனன்று கொண்டேயிருக் கின்றது. ஆகவே புறத்தே நெருப்புருவில் இறைவன் றிரு வண்ணாமலையில் விளங்கித் தோன்றினாற் போலவே, அகத்தே தீனிப்பையின் மேற் பகுதியில் உளதாகிய வெம்மையிலும் விளங்கி நிற்பனென்பதூஉம் பொருத்தமாகவே காணப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/246&oldid=1591216" இலிருந்து மீள்விக்கப்பட்டது