உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

❖ - 27✰ மறைமலையம் - 27

4

மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவ நடு" என்னும் ஆறுமா மெனவும், அவ்வாறிடங்களிற் புறத்தேயும் அகத்தேயுந் திருவாரூர், திருவானைக்கா, திருவண்ணாமலை, தில்லைச் ஆறு

சிற்றம்பலம், திருக்காளத்தி, காசி என்னும் திருக்கோயில்களும் விளங்காநிற்குமெனவும் பரஞ்சோதி

முனிவர்,

5

திருவளர் ஆரூர் மூலம், திருவானைக் காவே நாபி' மருவளர் பொழில்சூழ் அண்ணாமலைமணி பூரம் நீவிர் இருவருங் கண்ட மன்றம் இதய மாம் திருக்கா ளத்தி

பொருவருங் கண்டம் ஆகும் புருவமத் தியமே காசி

கூற்றும்

என்று தாமியற்றிய திருவிளையாடற் புராணத்திலே கூறாநிற்பர். ஆனால், திருமந்திரம் முதலான பழைய நூல்கள் இங்ஙனங் கூறக் காணேம். என்றாலும், க் பொருத்தமாகவே காணப்படுகின்றது; யாங்ஙனமெனில், ‘திருவாரூர்’ என்பது எருவாய் கருவாய்க் கிடையேயுள்ள மூலத்தின் கண்ணதாதலை முன்னரே விளக்கிப் போந்தாம்.

இனித், 'திருவானைக்கா' என்பது என்பது இறைவன் ஊற்று நீரிலும் விளங்குகின்றா னென்பதனைக் காட்டுதற் பொருட்டு நீர் ஊற்று உள்ளதோரிடத்தில் அமைக்கப்பட்ட தொரு திருக்கோயிலாகும்; இது புறத்தே நீரூற்றுள்ள தோரிடத்தில் அமைக்கப்பட்டாற்போலவே, நமதுடம்பின் அகத்தேயுங் கொப்பூழ்க்கீழ் உள்ள தீனிப்பை எந்நேரமும் நீர்நிறைந்ததாக இருத்தலின் அதன் கண்ணும் இறைவன் அமர்ந்திருக்கும் அத்திருக்கோயில் உண்டென்பது பொருத்த மேயாம். நாம் வாயிலிடுஞ் சோறு, காய், கனி, கிழங்கு, வித்துக், கீரை முதலியன பருப்பொருள் களேயாயினும், அவை வாயிலிடப் பட்டவளவானே எச்சில் நீருடன் கூட்டிக் குழைத்து நீராக்கிக் கீழே இறக்கப்படுதலானும், அங்ஙனம் எல்லாப் பருப்பொருள் களும் நீராகக் குழைக்கப்பட்டுத் தீனிப்பைக்குச் சென்றா லல்லாமல் அவைசெரியாமற் கக்கப்படுதலானும், ஒரோ வொருகாற் செவ்வனேமெல்லாமல் இறக்கப்பட்ட பண்டங்கள் தீனிப்பையினுட் சென்றவுடனே செரித்தற் பொருட்டு வாயினின்றும் உமிழ்நீர் ஒவாது சுரந்து கீழிறங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/245&oldid=1591215" இலிருந்து மீள்விக்கப்பட்டது