உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

219

அவையிரண்டும் ஒன்றையொன்று ஊடறுக்கும் இடமே புருவ நடுவென்றும் நெற்றிக்கண்ணென்றும்,இறைவனும் உயிரும் ஒன்றனோடொன்று பிரிவற விராய் ஒளிரும் நடுநிலையா மென்றும் ம் உணர்ந்து காள்க. இதனை ஆசிரியர் திருமூலர்,

கண்நாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துட் பண்ணாக்கி நின்ற பழம்பொரு ளொன்றுண்டு அண்ணாக்கி னுள்ளே அகண்ட ஒளிகாட்டிப் புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே

என்றும்

நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடஞ் சிற்றம்பல மென்று தேர்ந்துகொண் டேனே

என்றும் நன்கு தெருட்டியருளினமை காண்க

இனி, இவ்விந்திய நாடாகிய நாடாகிய உடம்பிற்கு உடம்பிற்கு நெற்றி போல்வது திருக்கேதாரம் என்றும்,அதன் தலையுச்சி போல்வது திருக்கைலாயம் என்றுங் கூறினமை, முன்னை யது இமயமலைச் சாரலிலும் பின்னையது அம்மலைமேலும் உண்மையினாலென்பதை முன்னரே விளக்கிப் போந்தாம், ஆகவே, புறத்தே ஏழிடங்களில் உளவான திருக்கோயில் களிற் சிவபிரா ன் றிருவருள் ஒளி முனைத்து நின்று ஆருயிர் கட்கு அருள் வழங்குமாப் போல், இவ்வுடம்பினகத்தேயும் மூலம், நெஞ்சம், செஞ்சத்தாமரை, மார்பம், புருவநடு, நெற்றி, சென்னி என்னும் ஏழிடங்களிலும் இறைவன்றன் அருளொளி முனைத்து நின்று ஆருயிர்கட் கருள் செய்யும் மறைந்த பேருண்மையினை மனத்தின்கட் பதித்துக் கொள்ளல் வேண்டு மென்பது.

இனி, இவ்விந்திய நாட்டைத் தாமும் அங்ஙனமே ஓர் உடம்பாக உருவகப்படுத்தி, அவ்வுடம்பின்கண் முதன்மை யான ஆறிடங்கள் உளவெனவும் அவை மூலம், கொப்பூழ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/244&oldid=1591214" இலிருந்து மீள்விக்கப்பட்டது