உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

❖ ❖ மறைமலையம் - 27

கொண்டு, அவையிரண்டனையும் ஒருவாற்றாற் பொருத்திக் கொள்க.

ம்

இயைபினைச்

இனிக். காசியைப் புருவநடுவின்கண் உளதாக வைத்து வழிபடுதற்குரிய சிறிது விளக்குவாம், நமதுடம்பின் நடுவே செல்லுஞ் சுழுனைநாடியின் இட டப் புறத்தே இடாநாடியும் வலப்புறத்தே பிங்கல நாடியுஞ் செல்கின்றன. இடாநாடியானது வலக்காற் பெருவிரலி லிருந்து துவங்கி, வயிற்றின்கீழ் மூலத்தே வந்து குறுக்கிட்டு இடப்பக்கத்தே மாறி இடது மூக்கின் கண் வந்து முடிகின்ற தென்றும், பிங்கல நாடியானது இடக்காற் பெருவிரலி லிருந்து துவங்கி மூலத்தே வந்து குறுக்கிட்டு வலப்பக்கத்தே மாறி வலது மூக்கின்கண் வந்து முடிகின்றதென்றும், நடுநிற்குஞ் சுழுனை நாடி எருவாய் கருவாய்க்கிடையே துவங்கிக் கொப்பூழ் மேல்வயிறு, நெஞ்சு, மிடறு, புருவ நடு என்னும் ஐந்திடங்களின் அகங்களையும் ஊடுருவிக் கொண்டு தலையின் உச்சியிற் சென்று முடிகின்றதென்றுந் தவ நூல்கள் நுவலா நிற்கின்றன, இவ்வாறு தலைக்கண் வந்து முடியும் நரப்புக் குழைகள் மூன்றும் புருவத்துக்கு நேரே தலையினகத் துளதாகிய நடுவிடத்தே போந்து ஒருங்கு கூடுதல் போலப் புறத்தே காசிமா நகரின் கண்ணுங் கங்கை யமுனை சரசுவதி என்னும் மூன்றியாறுகளும் போந்து ஒருங்கு கலத்தலிற் காசியைப் புருவ நடுவின்கண் உளதாக வைத்து வணங்கு தல் சாலவும் பொருந்துவதேயாம். பண்டைக் க் காலத் தோடிய சரச்சுவதி யென்னும் யாறு இக்காலத்தில் நிலத் தினுட் சுவறி லதாயிற்றேனும் முன்னொருகால் மூன்றி யாறுகளும் ஒருங்குகலந்த இ காசிமா நகரேயாகலின், அதனை அதுபற்றிப் புருவ நடுவினதாக வைத்து வழிபாடாற்றுதலில் இழுக்கொன்று மில்லையென்க.

டங்

ன்னும், புருவத்துக்கு நேராகத் தலையினுள்ளே ஒருகோடு செல்வதாகவுந் தலையுச்சியின் நடுவிருந்து கீழ் நோக்கி ஒரு கோடு அதனுள்ளே செல்வதாகவும் நினைந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/243&oldid=1591213" இலிருந்து மீள்விக்கப்பட்டது