உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

217

அங்ஙனம் இறைவனது ஒளியுருவு நிறுத்தப்பட்டிருக் கும் ஒருகோயிலின் கருவறை முழுதுங் பொற்றகடு பதித்துப் பொன்னொளி வீசுதல்பற்றி அதனை அஞ்ஞான்றிருந்த மக்கள் “பொன்னம்பலம்" எனத் தமது மொழியில் வழங்கி வந்தமையும் அந்நாட்டின் பண்டை வரலாறு கூறும் நூலால் நன்கறியக் கிடக்கின்றது.3 எனவே, இந்நிலவுலகின் ஒரு பாதியில் நெஞ்சத்தாமரையென விளங்குந் தில்லைப் பொன்னம்பலத்தே இறைவன்றன் அருட்கூத்து நடை பெறுமாறு போலவே, இதன் மறுபாதியில் நெஞ்சத் தாமரை யென வழங்கும் நடு அமெரிக்காவின் ஒரு பழம்பெருந் திருக்கோயிலின் பொன்னம்பலத்தேயும் இறைவன்றன் அருட்கூத்து நடை பெறுகின்றமை தெள்ளிதின் உணரப் படும்.

நாமிருக்கும் இம் மேலுலகினுக்கு நேர்கீழ்ப் பாதல உலகு அமெரிக்க தேயமேயாகும்; அத்தேயத்தின் நடுவண தான மெகுசிக நகரும் நாம் வணங்குந் தில்லை யம்பலத் திற்குச் சிறிதேறக் குறைய நேர்கீழ்க் கண்ணதாகவே அமைந் திருக்கும் உண்மையினை இந்நிலவுலகின் ஓவியத்தை நோக்கு தலால் எளிதில் அறிந்து கொள்ளலாம். இன்னும் மேலே தில்லையம்பலமுங் கீழே மெகுசிக அம்பலமும் அமைந் திருக்குமிடம் இந்நிலவுலகின் அனல் நடுக்கோட்டை யடுத்தேயிருத்தலானும், அவ்வனல் நடுக்காட்டிலிருந்தே இந்நிலவுலகு மேற்கிலிருந்து கிழக்கு முகமாய்ப் பகலவனைச் சுற்றிச் சுழலுதலானும், இறைவன்றன் அருட்கூத்தாகிய இயக்கம் இவ்விரண்டு வ்விரண்டு அம்பலங்களுக்கும் ஊட ாகவே நடைபெறுகின்றதென ஓர்ந்து கொளல் வேண்டும் என்பது.

இனிப், பிரயாகையை நெஞ்சமாகக் கோடல் பொருந் தாமையினை மேலே காட்டினாம்; அங்ஙனமே, குருக்கேத் திரத்தை மார்பகக் கோடலும் பொருந்தாமை மேலே காட்டப்பட்டது. ஆகவே, அவ்விரண்டனையும் புறத்தே அவ்வுறுப்புகளாக நினைதலைவிட்டு, இவ்வுடம் பினகத்தே நெஞ்சத்தாமரையைப் பிரயாகையாகவும், நெஞ்சத்திற்குப் புறத்தேயுள்ள மார்பினைக் குருக்கேத்திர மாகவும் நினைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/242&oldid=1591212" இலிருந்து மீள்விக்கப்பட்டது