உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

❖ ❖ மறைமலையம் - 27

பூதுற்றவர் களாய், அவற்றின்மேன் மூடிய காடுகளை அழித்து, இடிந்து கிடக்கும் அக்கோயில்களையும் இடி யாமல் அவற்றின்கண் எஞ்சி சி நிற்கும் பகுதிகளையும் பாதுகாத்துக், காண விரும்புவாரெல்லாரும் அவற்றை வந்து காண்டற்கு வேண்டும் ஒழுங்குகள் எல்லாம் செய்திருக் கின்றார்கள்.

அக்கோயில்கள், நம்தமிழ் நாட்டில் தில்லை, ஆரூர், கூடல், திரு திருவண்ணாமலை முதலிய நகர்களில் உள்ள சிவபிரான் திருக்கோயில்களைப் பார்க்கினும் மிகப் பெரியன வாயும், மிக அரிய தொழில் நுட்பம் வாய்ந்தன வாயும், றைவன் றிருவுருவம் நிறுத்தப்பட்ட கருவறை களின் சுவர்களிற் பொற்றகடுகள் பதித்துமேன் முகடுகளிற் பொன்னோடுகள் வேயப் பட்டனவாயுங் காணப்படு கின்றன, க்கோயில்களிற் பகலவன் திருவுருவில் வைத்தே அஞ் ஞான்றை மக்கள் சிவபிரானை வணங்கி வந்தனர்; அனற் சுடருக்கு அடையாளமான சிவலிங்கங்களும் அக்கோயில் களில் நிறுத்தப்பட்டிருக் கின்றன; இச்சிவலிங்க வடிவாக நிறுத்தப்பட்டிருக்கும் ஓர் உருவினைக் கண்ட வெள்ளைக்கார அறிஞர் சிலர் அதனைத் தமது மதத்திற்குரிய ‘சிலுவை யெனவே நினைந்துவிட்டனர். ஆனாற் கிறித்து மதந் தோன்று தற்குப் பல நூற்றாண்டுகளின் முன்னரே நடு அமெரிக்காவின் கண்ணவான நகர்களில் உள்ள பழைய கோயில்களில் நிறுத்தப்பட்ட அத்திருவுரு வினைச் சிலுவை' என்றல் ஒரு சிறிதும் இசையாது. நடுவே ஒரு கோட்டு வடிவுஞ் சுற்ற ஒரு வட்ட வடிவம் உடைய ஒர் உருவே தொலைவி லிருந்து நோக்கு வார்க்குச் ‘சிலுவை’ போற் றோன்றா நிற்கும், இனிச், சிலுவை வடிவுஞ் சிவலிங்க வடிவேயாகுமெனும் உண்மையினை அவ் வெள்ளைக்காரரில் அறிவான் ஆன்ற ஒரு சான்றோரே? நன்கெடுத்து விளக்கிக் காட்டியிருக்கின்றார். ஆதலாற் பழைய நடு அமெரிக்காவின் க்கோயில்களில் நிறுத்தப் பட் டிருக்கும் திருவுருச் சிவலிங்க வுருவே யல்லது சிலுவை யுருவன்றெனக் கடைப்பிடிக்க.

திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/241&oldid=1591211" இலிருந்து மீள்விக்கப்பட்டது