உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

215

மாடுறு மறைகள் காணா மன்னும்அம் பலமொன்று உண்டு அங்கு ஆடுதும் என்றும் என்றான் என்னை யாளுடைய ஐயன்

என்றும், விளக்கிக் காட்டினமை காண்க. இன்னும் இந்நிலவுலக அமைப்பினைக் காட்டும் ஓவியத்தினை ஒரு சிறிது நோக்குவார்க்கும், இந் நிலவுருண்டையின் ஒரு பாதியில் இவ்விந்திய நாடு நடுவே யமைந்திருத்தலும், இத்தென்றமிழ் நாடு அதில் ஒரு தாமரை முகைவடிவாய்த் தொங்கிக் காண்டிருத்தலும், அத்தாமரை முகையினுள்ளே தில்லைச் சிற்றம்பலந் திகழ்ந்து கொண்டிருத்தலுங் கண் கூடாய்க் காணக்கிடக்கும் என்க. எனவே, நமதுடம் பினகத்தே நெஞ்சத் தாமரையினுள் நுண்ணிய வெளியிலே அஃதாவது சிற்றம்பலத்திலே இறைவனது அருளொளி முனைத்து விளங்கி யியங்கும் இயக்கத்தால் நம்முடம்பு முயிரும் இயக்கப்படுதல் போலவே, இவ்வுலகின் புறத்தேயுந் தாமரை முகிழ்வடிவாய் அமைந்தஇத்தென்றமிழ் நாட்டில் தில்லைச் சிற்றம்பலமாகிய நுண் வெளியிலே இறைவனது அருளொளி யசைவாகிய திருக்கூத்து நடைபெற்று இவ்வுலகினை இயக்கா நிற்கின்ற தென்னு முண்மை நன்கு பெறப்படு மென்க.

அஃதொக்கு மாயினும், இந்நிலவுலகின் ஒருபாதியின் கண்ணதான இவ்விந்திய நாட்டின் தில்லைச் சிற்றம்பலத்தே இறைவனது திருவருட் கூத்து நடை பெறுமென்றாற் போல, அதன் மறுபாதிக் கண்ணதான அமெரிக்க தேயத்திலும் அப்பெற்றியதான ஓரிடத்தே இறைவன்றன் அருட்கூத்து நடைபெறுமெனக் கூறுதல் வேண்டும்; மற்று அங்ஙனங் கூறு தற்குச் சான்றில்லை யாலோவெனின்; அற்றன்று; ஆண்டும் றைவன்றன் அருட்கூத்து நிகழும்இடம் உண்டென்பது காட்டுவாம். வட அமெரிக்காவுக்குந் தென்னமெரிக்காவுக்கும் நடுமையமாகிய “மெகுசிகம்”, “பேரு" என்னும் பண்டை நாடுகளில் இற்றைக்குச் சிறிதேறக் குறைய ஏழாயிர ஆண்டு கட்கு முன்னமே அமைக்கப்பட்ட மிகப்பெரிய பழைய சிவபிரான் திருக்கோயில்கள் உண்டு. அவைகள் இந்நாளில் இடிந்து காடு மூடிக்கிடப்ப, வெள்ளைக்கார அறிஞர்கள் அக்காடுகளின் உள் நுழைந்து சென்று, அத்திருக்கோயில் களின் மிக வியப்பான அமைப்புகளைக் கண்டு இறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/240&oldid=1591210" இலிருந்து மீள்விக்கப்பட்டது