உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

❖ ❖ மறைமலையம் – 27

தலைமையுடையதாய்ச் செல்வத்தின் மிக்கதாய் மூன்று கண்களையுடையதாய், நீலமிடற்றினதாய்ப் பொறு மையிற் சிறந்ததாய், எல்லா வற்றிற்கும் பிறப்பிடமாய், எல்லாவற்றினையுஞ் சான்றாக நோக்குவதாய் இருப்பதனை வழுத்தி, அதனால் முனிவனாகி,இருளின் மேற் போவன் என்று இங்ஙனமே நெஞ்சத்தாமரையுள் வைத்து இறைவனை வழிபடுமாற்றை விரித்துரைத்தமை காண்க.

""

அது பொருந்துமாயினும், உடம்பினகத்தே இறைவன் முனைத்து நின்றாடும் உறுப்புத் தாமரை முகைவடிவாய்த் தொங்கும் நெஞ்சப்பையின் அகமே யாயினாற்போலப் புறத்தே இவ்வுலகினுக்கு அல்லது இவ்விந்திய நாட்டுக்குத் தில்லைச்சிற்றம்பலமே நெஞ்சுத்தாமரையா மென்றல்

யாங்ஙனம்

பாருந்துமெனின்; அதனையுஞ் சிறிது விளக்குவாம். இந்நிலவுலகின் நடுவே ஊடுருவிச் செல்லும் அனற்கோடு இலங்கைக்குத் தெற்கேயுளதேனும், அதன் பரப்பு அதற்குத் தெற்கேயும்வடக்கேயும் ஆயிரத்தறுநூறு கல்வரையில் உளதென்று இஞ்ஞான்றை நிலநூல் வல்லார் கணக்கெடுத்திருத்தலின், இலங்கைக்கு வடமேற்கிலுள்ள தான தில்லைச் சிற்றம்பலம் அவ்வனற் கோட்டின் பரப்பின் கண்ணே தான் அமைந்திருத்தல் தெள்ளிதின் விளங்கா நிற்கும். உயிர்களதுடம்பின் நடுவே செல்லுஞ் சுழுனை நாடிபோல், இவ்வுலகின் நடுவே அனற்கோடு செல்கின்ற தெனவும், அச்சுழுனை நாடியிற் றொங்கும் நெஞ்சத்தாமரை முகிழ் போல் அவ்வனற்கோட்டின்கட் டில்லைச் சிற்றம்பலம் அமைந்துளதெனவும் திருவாதவூரடிகள் புராணமும்

கோயிற் புராணமும்முறையே இவ்வுண்மையினை,

ஒன்றாய்

இடம்படும் உடம்பின் மூலத்தெழுந்தநற் சுழுனை நாடி உடன்கிளர் ஒளியே யாகி யொளியில் அஞ்செழுத்தும் நெடுங்குழல் ஓசையாகி நிலவும் அவ் வோசைபோய் அங்கு அடங்கிய இடமே யென்றும் ஆடும் அம்பலம தாகும்

என்றும்,

நாடரு நடுவின் நாடி நலங்கிளர் தில்லை நேர்போய்க் கூடும்அங் கதனின் மூலக் குறியுளது அதற்குத் தென்னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/239&oldid=1591209" இலிருந்து மீள்விக்கப்பட்டது