உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

213

மக்களறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டா நிலைக்கண் நிகழ்தல் பற்றி அதனை நிகழ்த்துவான் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனேயாவன் என்பதூஉம் பெறப் படுதலின் என்க.

விழிப்பின்கண் மூளையில் முனைத்து நின்ற உயிர் உறக்கத்தின்கண் நெஞ்சப்பையினுட் சென்றடங்கிவிட, அதனை அங்கே சில நாழிகை நேரம்இளைப்பாற அடக்கி வைத்து அவ்விளைப்புத் தீர்ந்தவுடன் அதனை ஆண்டு நின்றும் மேலெழுப்பிவிடும் இறைவனது அருட்பெருஞ் செயல் நெஞ்சத் தாமரையினுள்ளே தான் ஓவாது நடை பெறுகின்றதென ஓர்ந்துகொள்க. இந்நெஞ்சத் தாமரையின் கண் இடை விட ா தொளிரும் றைவன்றன் றிருவரு ளொளியிலே தமது கருத்தைப் பதித்திருப்பார்க்கு எல்லாப் பெறற்கரும் பேறுகளும் வாய்க்குமென்பது தெரிப்பார் சிரியர் தெய்வத்திருமூலர்,

நாசிக் கதோமுகம்பன்னிரண் டங்குலம்

நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யுந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே.

என்று திருமந்திரத்தின் கண்ணும் அருளிச் செய்தாரென்பது. வடமொழியிற் கைவல்யோப நிடதமும்,

66

தனிமையான இடத்தே இனிதிருந்து, தூயனாய்க், கழுத்துத் தலை யுடம்புகளை நேரொக்க நிறுத்தி, நிலை களைக் கடந்து ஐம்புலன்களையும் ஒடுக்கி, அன்பினாற் றன் ஆசிரியனை வணங்கி, நெஞ்சத்தாமரையைத் துகளற்ற தூயதாக நினைந்து, அதன் நடுவிலே மாசற்றதாய்த் துயர மில்லாததாய், எண்ணுதற் கரியதாய், வெளிப்படுதலில தாய்ப், பல வடிவினதாய்ச் சிவம் என்னும் பெயரினதாய், உலகங்கள் ஒடுங்குமிடமாய், அழிவில்லாததாய், நான் முகற்குப் பிறப்பிடமாய், அது வெனப்படுவதாய் முதல், நடு, ஈறு இல்லாத தாய், ஒரே பொருளாய், எங்கும் நிறைந்ததாய், அறிவும் இன்பமும் வாய்ந்ததாய், உருவமற்றதாய், இரண் டற்றதாய், உமையொரு கூறதாய், எல்லாவற்றிற்கும் மேலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/238&oldid=1591208" இலிருந்து மீள்விக்கப்பட்டது