உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் - 27

நாழிகை வட்டிலின் (கடிகாரத்தின்) அகத்தும் புறத்துமுள்ள உருள்களும் முட்களும் அதன் முதன்மையான சுழல்வில்லின் விரிவினாலேயே இயக்கப்படுதல் போலவும், ஒருபெருந் தொழிற் சாலையில் இயங்கும் பல்வகைப் பொறிகளும் அதன்கண் முதன்மையாய் மிகுவிரைவுடன் சுழலும் ஒரு பேர் உருவினாலேயே இயக்கப்படுதல் போலவும், ஒரு புகை வண்டித் தொடர் அதனை ஈர்த்துச் செல்லும் ஒரு நீராவி வண்டி யினாலேயே இயக்கப்படுதல் போலவும், மக்களுடம் பின் நெஞ்சத் தாமரையினுள்ளே விளக்கின் சுடர்க்கொழுந் தென அசையும் இறைவனது அருள்ஒளியினசைவினாலேயே வ்வுடம்பின் உள்ளும் புறம்புமுள்ள எல்லா உறுப்புகளுந் தாடர்பு பட்டு அசையா நிற்கின்றன. இத்துணைச் சிறந்ததாகிய நெஞ்சப்பையி னசைவுக்குச் சிறிது ஊறுபாடு நேருமாயினும்இவ்வுடம்பினசைவு ம்பினசைவு நின்றுவிடும்; அது நிற்கவே, உயிர் உடம்பின்கண் நிலையுதல் இல்லையாய் ஒழிந்துபோம் இது, நெஞ்சடைப்பு நோயால் ஒரு நொடிப் பொழுதில் இறந்து படுவார் மாட்டு வைத்து நன்கறியப்படும்

அற்றேல் நமது அறிவி னியக்கத்திற்குத் தலை யின்கண் அமைந்த மூளையே இன்றியமையா உறுப்பாய் விளங்கி நிற்றலின் அதன்கட் புலப்பட்டு நின்றே இறைவன் இவ்வுடம் பினை இயக்குகின்றான் என்னாமோவெனின்; என்னாம்; என்னை? விழித்திருக்கும் நிலையிலன்றி, அயர்ந்த உறக்கத்தில் மூளையிருந்தும் அஃது உயிரின் அறிவு விளக்கத்திற்குத் துணை செய்யாமல் ஓய்ந்து கிடத்தலானும், மற்று நெஞ்சத் தாமரையோ விழிப்பின் மட்டுமேயன்றி உறக்கத்திலும் ஓவாது இயங்குதலானும், நோய் கொண்டார் சிலர்க்கு கு மூளையை மண்டையினின்றும் பிரித்தெடுத்த வழியுஞ் சில நாழிகை நேரம் அவரதுயிர் அவருடம்பின்கண் நிற்க அவரது நெஞ்சப்பையை அவ்வாறு அவரது உடம்பினின்றும் பிரித்தெடுத்த அந்நொடியே அவரதுயிர் உடம்பைவிட்டு ஏகக்காண்ட லானும், நெஞ்சத்தாமரையின் இயக்கமே இவ்வுடம்பினியக்கத்திற்கும் அதன்கண் உயிர் நிலவுதற்கும் ன்றியமையாததாய் நிகழ்கின்றதென்பதூஉம், அவ்வியக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/237&oldid=1591207" இலிருந்து மீள்விக்கப்பட்டது