உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

211

சேர்ப்பித்து அதிலுள்ள நச்சுக்காற்றை வெளிப்படுத்தும் அருஞ் செயலை நெஞ்சப்பைகள் எவ்வாறு செய்கின்றன? நாம் உட்கொள்ளும் உணவை ஏற்குந் தீனிப்பை அதனை நம் முடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாது வேண்டும் பல வேறு சாறுகளாக எவ்வாறு பிரித்து எவ்வாறு அவற்றை உட்செலுத்துகின்றது? அதனால் அதனினின்றும் பிரித்துக் கீழ்க்கழிக்கப்படுங் கழிவுகளாகிய மலமுஞ் சிறுநீரும் மல நீர்ப்பைகளுக்குப் போதலும் பின்னர் அவற்றினின்று புறம்போக்கப்படுதலும் எங்ஙனம் நிகழ்கின்றன? என்று எவ்வளவுதான் நாம் ஆராய்ந்து பார்த்தாலும் அந்நிகழ்ச்சி கள் நம் அறிவுக்குச் சிறிதும் புலப்படுகின்றில. நமதுடம்பின் அகத்துள்ள பல்வேறு வியத்தகு உறுப்புகளின் இயற்கையுஞ் செயலும் ஒருசிறிதும் அறிய மாட்டாச் சிற்றறிவினேமாகிய யாமே அவற்றைப் படைத்து யாமே அவற்றை இயக்கு கின்றேமென உரைத்தால், அவ்வறிவில்லா உரை அறிவிற் சிறியராயினார்க்கும் நகையினை விளையா தொழியுமோ? மற்று, அறிவிற் பெரியராயினார்க்கோ அஃது எத்துணைப் புல்லிய குருட்டுரையாகக் காணப்படும், ஆகவே, நமதுடம் பின் அகக் கருவி புறக்கருவிகளின் இயற்கையும் இயக்க மும்அறிய மாட்டாப் பேரறியாமை வாய்ந்த நாம் அவற்றை அமைத்தலும் நடத்தலும் ஒருசிறிதுஞ் செய்ய மாட்டாமை யின், நம் அறிவுக்கு எட்டா அவை யிரண் டனையுஞ் செய்ய வல்லவன் இறைவன் ஒருவனே யாவ னன்பதூஉம்,

அவ்விறைவன் அகம் புறம் என்னும் எல்லா டங்களிலும் வான்வெளி போல் நிறைந்து நிற்கும் இயல் பினனாகலின் அவனே எல்லா உடம்புகளின் அகத்தேயும் ஊடுருவி நின்று அவ்வுடம்புகளின் அகப்புற உறுப்புகள் அத்தனையும்இயக்கி

அவை

தம்மை உயிர்களுக்குப் பயன்படுத்துகின்றன னன்பதூஉம் நன்கு முடிக்கப்படும்.

இங்ஙனமாக றைவன் உடம்பினகத்துள்ள எல்லா உறுப்புகளிலும் நின்று அவையிற்றை இயக்குகின்றானேனும், அவ்வுறுப்புகளிற் றலைசிறந்ததாகிய நெஞ்சத்தாமரையினுள் நின்றே ஏனையெல்லா உறுப்புகளையும் இயக்குகின்றன னென்பது ஆராய்ச்சியால் இனிது புலனாகின்றது. ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/236&oldid=1591206" இலிருந்து மீள்விக்கப்பட்டது