உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

❖ ❖ மறைமலையம் - 27

நடுவாஞ் சுழுனை என்பதில் மேரு என்பது பொதுவாக எல்லா மலைக்கும் பெயராகலின் அதனைத் திருவண்ணா மலைக்குப் பெயராகக் கோடலே பொருத்தமாம்; ஏனெனில், இலங்கைக்கும் இமயத்திற்கும் நடுநிற்குஞ் சிறந்த தெய்வமலை அதுவே யாகலானும், அடுத்து ஓதப்பட்ட "தில்லைவனம்” அத் திருவண்ணா மலைக்கு அணித்தாய் இருப்பதொன்றாக லானும், திருவண்ணா மலை யை நடுநாடியாகிய 'சுழுனை யாகக் கொண்டா லல்லாமல் ‘தில்லை’யை அச்சுழுனையின் நடுவாகக் கொள்ளுதல் இயையாதாகலானும், இவ்வாறன்றி ஈண்டு 'மேரு' என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்ட மலை இமயமலைக்கும் அதற்கப்பா லுள்ள சீனதேயத்திற்கும் வடக்கே அப்பெயர் பெற்றுள்ள தொரு மலையெனக் கொள்ளின் அஃது இலங்கைக்கும் இமயத்திற்கும் நடுவணதாதல் செல்லாதாக லானும், செல்லா தாகவே அதன் நடுவிற்றில்லைமன்று உண்டென்றல் பொருந் தாதாலானும் இத்திருமூலரது திருப்பாட்டிற் போந்த ‘மேரு' என்பதற்குத் திருவண்ணாமலை ல யெனப் பொருளுரைத்தலே பொருந்துவதாமென்று தெரிந்து கொள்க.

இனி, இவ்வுடம்பினகத்தே நெஞ்சத்தாமரையில் இறைவன் ஒளிவடிவினனாய் விளங்கும் உண்மையினைச் சிறிது விளக்குவாம். மக்களாய்ப் பிறந்த மன்னுயிர்களும் மற்றைச் சிற்றுயிர்களுந் தமதுடம்பின் புறத்தேயுள்ள மெய், வாய், கண், மூக்குச், செவியென்னும் ஐந்து அறிவுப் பொறி களையும், நா, கை, கால், எருவாய், குறியென்னும் ஐந்து தொழிற் பொறிகளையும் இயக்கவல்லவைகளாயிருக் கின்றனவேயன்றி, உடம்பினகத்தே யுள்ள நெஞ்சப்பை, மூச்சுப்பை, தீனிப்பை, மலஞ், சிறுநீர்ப்பை முதலானவைகளை யெல்லாந் தாம் வேண்டிய வாறெல்லாம் இயக்க வல்லவை களாயில்லை. நம் நினைவுக் கேற்றபடி யெல்லாம எவ்வாறு மூளை இயங்குகின்றது?

மூளை,

நம்மையறியாமலே நாம் உறங்குவதும், நம்மை யறியாமலே நாம் விழிப்பதும் யாங்ஙனம் நடைபெறு கின்றன? நாம் உள்ளிழுக்குந் தூய காற்றைச் செந்நீரிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/235&oldid=1591205" இலிருந்து மீள்விக்கப்பட்டது