உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

209

தாய்த்திகழக் காண்டலின், இத் தென்றமிழ்நாடு முக்கோண வடிவிற்றாய்த் திகழ்தல் கொண்டும், இதனை யடுத்தே இந்நிலவுலகத்தின் சூடு மிகுந்த நரம்பினோட்டம் (Equator) செல்லுதல் கொண்டும், வட நாடுகளெல்லாங் குளிர்மிகுந்தே நிற்க இந்நடு நரம்பினை யடுத்த தென்னாடுகளே வெம்மை மிகுந்தனவாயிருத்தல் கொண்டுந் தென்னாட்டின் கண்ண தான ‘திருவாரூர்' இவ்விந்திய நாட்டுக்கு மூலமான முக் கோண வடிவின்கண் அமைக்கப்பட்டுள தென்னும் ஆன் றோருரை சாலவும் பொருந்துவதேயாம் என்க. இவ்விந்திய நாட்டின் வட பகுதியிற் குளிர்மிகுந்த நரம்பி னோட்டமும், தன் றென் பகுதியில் அனல் மிகுந்த நரம்பினோட்டமும், வை யிரண்டுக்கு மிடையே நரம்பினோட்ட மும்அமைந்துள வென்று ஆசிரியர் தெய்வத்திருமூலர்,

நடு

இடைபிங் கலைஇம வானோ டிலங்கை நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை கடவுந் திலைவனங் கைகண்ட மூலம் படர்வொன்றி யென்னும் பரமாம் பரமே

என்றருளிச் செய்தமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று.

"

ச்செய்யுளிற் கூறப்பட்ட ‘இடைநாடி' என்பது குளிர் மிகுந்த தொன்றாய் இமயமலைப் பக்கமாய்ச் செல்லா நிற்கின்றது. ‘பிங்கலை நாடி' என்பது அனல் மிகுந்த தொன்றாய் இலங்கைப் பக்கமாய்ச் செல்லா நிற்கின்றது. இடை பிங்கலை மவானோடு இலங்கை என்பதில் டை என்பதனை இமவானோடும், பிங்கலை யென்பதனை லங்கையோடும் நிரல் நிறையாக இயைத்துப் பொருள் கொள்க; இங்ஙனம் பொருள் கொள்ள அறியாதார், இடை நாடியை இலங்கையோடும், பிங்கலை நாடியை இமவா னோடும் இயைத்துப் பிழைபடுவர். சூடுமிகுந்த பிங்கலை நாடி இலங்கைப் பக்கமாய்ச் செல்லுமென்றலே இஞ் ஞான்றை இயற்கைப் பொருள் நூலுக்கும் பொருத்தமாய்க் காணப்படுகின்ற தல்லாமல், அஃது இமயமலைப் பக்கமாய்ச் செல்லுமென்ற அதற்குப் பொருத்தமாய் காணப் படாமையும் ஆராய்ந் துணர்தல் வேண்டும். "நடுநின்ற மேரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/234&oldid=1591204" இலிருந்து மீள்விக்கப்பட்டது