உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

❖ மறைமலையம் - 27

உடம்பெங்கும் பரவுங் கொடிய காய்ச்சலின் சூடு வயிற்றின் அடி மூலத்தினின்றே மிகுந்து தோன்றி உடம்பெங்கும் பரவும் உண்மைஇது கொண்டு தெற்றென அறியப்படும், இங்ஙனமே மூலத்தின் சூடு குறைய உடம்பெங்குமுள்ள சூடும் உடன் குறையக் குளிர்நோய் காணுங்காலும், வயிற்றினடியை நீருள் அமிழ்த்திக் கழுவு முறையாற் கழுவ, அங்ஙனங் கழுவிய சிறிது நேரத்திலெல்லாம் உடம்பெங்கும் இருக்கவேண்டுஞ் சூடு இருக்குமளவாய்ப் பரவ, அக்குளிர்நோய் நீங்கி விடுதலுங் கண்கூடாய் அறியக் கிடக்கின்றது.

இவ்வாற்றால், மூலத்திலுள்ள அனலே உடம் பினிருப்புக்கும் அழிவுக்கும் ஏதுவாய் நிற்றல் நன்கு விளங்கா நிற்கும். இத்துணைச் சிறந்ததாகிய மூல அனலிலே இறைவனது ஒளிவடிவை அகக் கண்ணால் விளங்கக் கண்டு அதன் கண்ணே நினைவைப் பதித்து உள்ளம் உருக வல்லார்க்கு, அவர் தம் உடம்பும் உயிரும் அவ்வொளியினால் ஊடுருவப் பெற்று அழிவின்றித் திகழும். இஃது,

எருவிடும் வாசல் இருவிரன் மேலே கருவிடும் வாசல் இருவிரற் கீழே

உருவிடு சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடு சோதி கலந்து நின்றானே

என்னுந் திருமூலர் திருப்பாட்டால் நன்கறியப்படும்.

அற்றேல் அஃதாக; இவ்வுடம்பினகத்தே வயிற்றி னடியில் மூலவனலும் அதன்கண் இறைவனொளியும் ஒளிரு மாப் போற், புறத்தே திருவாரூரின் கண்ணும் அவை யிரண்டும் ளிருதல் கண்டிலம், அதனால் அத் திருக்கோயில் வ்விந்திய நாடாகிய உடம்பின் மூலத்தே அமைந்துள தென்றல் யாங்ஙனம் பொருந்துமெனின்; அது பொருந்து மாறு காட்டுதும். இவ்விந்திய நாட்டின் இயற்கை யமைப்பை ஓவியத்திற் காண்பார்க்கு, இத்தென் றமிழ் நாடு முக்கோண வடிவினதாய் அமைந்திருத்தல் நன்கு விளங்கும். முக்கோண வடிவு தீயின் வடிவினைக் குறிப்பதோர் அடையாளமாம். என்னை? நெருப்பு எரியுங்கால் அதன் அனற்பிழம்பு அடியில் அகன்று மேலெழுங்காற் குவிந்து முக்கோண வடிவின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/233&oldid=1591203" இலிருந்து மீள்விக்கப்பட்டது