உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

207

நடுவாகவுங் கூறுதல் பொருத்த மாகக் காணப்படவில்லை. மற்றுத் திருவாரூரை மூலத்தின் கண்ண தாகக் கூறுதலோ பொருத்தமுடைத்தேயாம். இங்ஙனம் புறத்தே வடக்கேயுந் தெற்கேயுந் காணப்படும் ஏழு திருக்கோயில்களையும் வ்விந்திய நாடாகிய உடம்பின் ஏழு ஏழு முதன்மையான இடங்களில் உளவாக வைத்துக் கூறுதலிற் சிறிது மாறுபாடு ளதேனும், வை தம்மை மக்களுடம்பின் முதன்மையான ஏழு இடங்களில் உளவாக வைத்துச் செய்யும் அகமுக வழிபாட்டிற் சிறிதும் அத்தகைய மாறுபாடில்லை யென்பது உணரற்பாற்று. யாங்ஙனமெனிற் காட்டுதும்.

ஓர்

வயிற்றின் அடிக்கீழ் எருவாய், கருவாய் என்னும் ரண்டுக்கும் நடுவே முக்கோண வடிவினதான எலும்பினைப் பற்றிக் கொண்டு காணப்படும் டமே 'மூலம்' ஆகும்

ம்

என்று தவநூல்கள் நுவலா நிற்கின்றன. இம் மூலத்தின்கண்ணதான அனல் மிகாதுங் குறை யாதும் இருக்கு மாயின் மக்களுடம்பு எல்லா நலங்களும் உடையதாய் நீண்ட காலம் அழிவின்றி நிலைபெறும்; அவ்வாறின்றி அவ்வனல் தன் நிலையினின்றும் மிகுந்து விடுமாயின் அஃதுடம் பெங்கும் பரவி உடம்பிலோடுஞ் செந்நீரினை உரிஞ்சி உயிரை உடம்பினின்றும் அகற்றும்; அல்லது தன்னிலையிற் குறைந்து விடுமாயின் உடம்பினுள் ளோடுஞ் செந்நீருஞ் சூடு குறைந்து உறைய உயிர் றைய உயிர் அவ்வுடம்பில் நிலையாதாய் அதனைவிட்டு அகலும். டு

இவ்வாறு மூலத்திலுள்ள சூடு மிகுந்தேனுங் குறைந் திதேனுங் காணப்படும் போதெல்லாம் வெப்பு நோயும் பிற நோய்களும் உடன் காணப்படுகின்றன. இந் நுட்பத்தை நன்குணர்ந்தன்றே மேனாட்டு மருத்துவ ஆசிரியரான லூயிஸ் கூன்' என்பார். வயிற்றின் கீழ்ப்பகுதியைக் குளிர்ந்த நீராற் கழுவும் இயற்கை முறையைக் கண்டு அதனால் எல்லா நோய்களையும் எளிதில் நீக்கிக் கொள்ளும் வழி காட்ட லாயினர். எத்துணைக் கொடிய வெப்பு நோய் கொண்டாருந் தமது வயிற்றினடியைக் குளிர்ந்த நீரினுள் அமிழ்த்தி அதனைச் சிறிது நேரங் கழுவுவராயின், அவ்வெப்புநோய் உடனே தணிந்து போதலை எந்நாளும் எளிதிற் காணலாம். ஆகவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/232&oldid=1591202" இலிருந்து மீள்விக்கப்பட்டது