உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

❖ ❖ மறைமலையம் – 27

இனி, இந்நிலவுலகினிற் சிறந்த இவ்விந்திய நாட்டை இறைவற்கோர் உடம்பாகக் கொண்டு, அவ்வுடம்பினகத்தே இறைவன் விளங்கி நிற்றற்கேற்றசிறந்த இடங்கள் தலையின் உச்சியும், நெற்றியும், புருவநடுவும், மார்பும், நெஞ்சமும், நெஞ்ச நடுவும், மூலமும் என ஏழிடங்கள் உளவாகலின் அவ் வேழிடங்களுந் திருப்பருப்பதம், திருக்கேதாரம், காசி, குருக்கேத்திரம், பிரயாகை, தில்லை, திருவாரூர் ஆமென வகுத்து, அவ் வேழிடங்களிலுந் திருக்கோயில்கள் அமைத்து, அவற்றின்கட் சிவலிங்க உருவினை நிறுத்தி அதன்கண் இறைவனை, நம் பண்டைப் பெரியார்கள் தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றார், புறத்தே இவ்விந்திய நாட்டின்கண் ஏழிடங்களிலே வைத்து அங்ஙனம் இறைவனை வழிபட்டு வருதல் போலவே, அவர்கள் தமதுடம்பின் அகத்தேயும் அவ்வேழிடங்களில் இறைவன்றன் ஒளியுருவினை நிறுத்தி, அதன்கட்டமது கருத்தினை ஒரு முகப்படப் பதித்து வழிபாடாற்றி வருதலையும் மேற்கொண்டு நிற்கின்றார். இவ்வுண்மை,

சென்னி சீசைலம் பாலவங்கே தாரந் திகழ்தரு புருவமத் தியமே மன்னிய காசி வண்குயத்தானம் வளர்குருக் கேத்திரம் இதயந் துன்னிய புண்ணி யப்பிர யாகை சொல்லும் அவ் விதயத்தின்

நடுவண்

மின்னிடு தெய்வ சிதம்பரம் மூலா தாரத்தா ரூர்என்பர் மெய்க்கண்

அம்மலைச்சாரலின்

என்னுஞ் சூதசங்கிதைச் செய்யுளால் அறியப்படும், இவ் விந்திய நாட்டின் வடக்கைத் தலையாகவுங் குமரிமுனை யுள்ள தெற்கை அடியாகவுங் கொண்டால், இமயமலைக் கண்ண தான திருக்கைலாயத்தை அத்தலையின் உச்சி யாகவும், கண்ணதான திருக்கேதா ரத்தை நெற்றியாகவும்; அதற்குக் கீழ்க்கண்ணதான காசியைப் புருவத்தின் நடுவாகவுங் கோடல் பொருந்தும். ஆனாற் காசியின் வடக்கேயுள்ள குருக்கேத்திரத்தை மார் பாகவும், அதற்குத் தெற்கேயுள்ள பிரயாகையை நெஞ்ச மாகக் கோடல் பொருந்துமேனும் பிரயாகைக்குத் தெற்கே நெடுந்தொலை விலுள்ளதான தில்லைச்சிற்றம் பலத்தை அந்நெஞ்சத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/231&oldid=1591201" இலிருந்து மீள்விக்கப்பட்டது