உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

205

கோயில்கள் இருந்தமை பவிடிய புராணத்தாலும் பழைய சத்திராபி மன்னர்கள் வழங்கு வித்த நாணயங்களில் ஞாயிற்றின் வடிவம் பொறிக்கப் பட்டிருத்த லானும் புலனாகின்றது; அதுவேயுமன்றிப் பஞ்சாபு தேயத்தின் கண்ணதான முலுத்தானத்தில் மிகச் சிறந்ததொரு பகலவன் கோட்டம் இருந்தமை, இற்றைக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் இவ்விந்தியநாடு போந்து இங்குள்ள காட்சிகளைக் கண்டெழுதிய சீன அறிஞரான அயூன்தாங்கு கூறும் உரைகளாலுந் தெளியக் கிடக்கின்றது. மிகச் சிறந்த றிருக்கோயில் மகமதிய வேந்தனான அவுரங்கசீபு காலத்திலேதான் சிதைத்து அழிக்கப் பட்டது. இங்ஙனமே நிலவோனை வழி படுஞ் சமயத்தவர் இருந்தமை ‘சங்கர விஜயத்' தினுட் சொல்லப்படுதலின், அதற்குத் திருக் கோயில்கள் வட நாட்டின்கண் இருந்தமை உய்த்தறிப்படும். மட்டுமேயன்றி,

ப்பகலவன்

இவ்விந்தியதேயத்தின்

இனி, இற்றைக்குப் பதினாயிர ஆண்டுகளுக்கு முன்னரே நந்தமிழ் மக்களின் முன்னோர்கள் சென்று குடியேறி வைகிய மேல்பால் நாடுகளான சாலடி, அசுரம், எகுபதி, பாபிலோனியம் முதலானவைகளிலுங்கீழ்பால் நாடுகளான மெகுசிகம், பேரு முதலானவைகளிலும் மிகப் பெரிய சிறந்த பகலவன் கோட்டங்களும் நிலவோன் கோட்டங்களும் இருந்தன. அவைகள் நிலத்தின்கட் புதைந்துபோனமை தெரிந்து, அவைகள் வெள்ளைக்கார அறிஞர்கள் அகழ்ந்து வைத்து, அவையிற்றின் வியத்தக்க மிக அழகிய அமைப்பு களை விரிவாக எழுதி ஓவியம் எடுத்துங் காட்டியிருக் கின்றார்கள். ஆகவே இற்றைக்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே மேல்பால், கீழ்பால் நாடுகளிலும் இவ்விந்திய நாடுகளிலும் இருந்த அறிவான் ஆன்ற நாகரிக மக்கள் அனைவரும், இவ் வுலகினை ஒருபுடையொப்ப எழுப்பிய பெரிய பெரிய திருக்கோயில்களிலெல்லாம் பகலவன் றிருவுருவினையும் நிலவோன் றிருவுருவினையுமே நிறுத்தி, அவை தம்மில் முனைத்து விளங்காநின்ற முழுமுதற் கடவுளை வழிபட்டு வந்தமை தெற்றென வுணரப்படுமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/230&oldid=1591200" இலிருந்து மீள்விக்கப்பட்டது