உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

❖ ✰ மறைமலையம் – 27

இயக்குவதொன்றின்மட்டும் அமையாது. இவையிற்றின்கண் ருந்து உயிர்வாழும் எல்லா உயிர்கட்கும் அறிவையும் முறைமுறையே விளங்கச் செய்து வருகின்றான். யாங்ஙனம் அறிவு விளங்கச் செய்திருக்கின்றானெனின்; உயிர்களின் கண்ணறிவை விளக்கி அவ்வாற்றால் அவை மனனுணர்வையும் விளங்கச் செய்கின்றானென்க.

தம்

இனி, உயிர்களின் கண்ணறிவை, விளக்குதற்கு ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்றிலும், புறத்தே உலகின் கண் ஒளியுருவாய் ஒளிராநின்ற முதல்வன், கண்ணறிவு விளங்கி அவ்வாற்றால் விளங்கப்பெறும் உயிர்களின் உடம்பின் அகத்தே மனனுணர்விலும் அறிவொளியாய்த் துலங்கா நிற்கின்றன னென்று ஓர்ந்து கொள்க. இவ்வாறு இறைவன் புறத்தே உலகின்கண் ஒளிவடிவாய் விளங்கும் வகையினையும், அகத்தே உடம்பின்கண் அறிவொளியாய்த் திகழும் வகையினையும் அறிவுறுத்தி, மக்கள் உள்ளத்தைத் தூய்மை செய்து இறைவன்றன் அருளொளியிற் படிவித்தற் பொருட் L டாகவே, அறிவான்மிக்க நம் பண்டைச் சான்றோர்கள்,

திருக்கோயில்களையும் இருவகையமைப்புகளுட்படுத்து அமைக்கலாயினர்.

ஆனாலும், உலகினை யொப்ப அமைக்கப்பட்ட திருக்கோயில்களின் கருவறையிலே ஞாயிறாவதுதிங்களாவது வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது, நமக்குக் கட்புலனாகும் ஒன்பது மண்டிலங்களில் ஞாயிறுந் திங்களுமே ஒளி விளக்கமுடையனவாய் நம்முடம்பையும் உயிரை யும் அறிவையும் வளர்ப்பனவாய் இருத்தலின், அவை யிரண்டும் றைவன் விளங்கித் தோன்றி உறையுந் திருவுரு வங்களாகக் கருதப்பட்டன. உலகினையொப்ப அமைத்த பழைய திருக்கோயில்கள் ஒரே மதிற்சுற்று மட்டும் வாய்ந்தன. அவற்றின் நடுவே பகலவன் அல்லது நில வோனது திருவுருவம் நிறுத்தப்பட்டிருந்தது. இத்தகைய பகலவன் கோட்டம், நிலவோன் கோட்டம் பண்டை நாளில் இத்தமிழ்நாட்டின் கண் இருந்தமை சிலப்பதிகாரம் என்னும் பழைய தமிழ் நூலால் நன்கறியப்படுகின்றது, இத் தமிழ்நாட்டின் மட்டுமேயன்றி, வட நாட்டின்கண்ணும் பகலவன்றிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/229&oldid=1591199" இலிருந்து மீள்விக்கப்பட்டது