உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

இரும்பு, ஈயம், கெந்தகம்

வள்ளி, முதற்பொருள்கள்

203

முதலான

ஆங்காங்கு உளவாதல் போலவே, உடம்பிலும் பொன் வெள்ளி இரும்பு ஈயம் கெந்தகம் முதலான முதுற்பொருள்கள் பொருந்தி யுள்ளன.

உலகிற் கடல்களும், ஆறுகளும் அமைந்திருத்தல் போலவே, உடம்பில் தீனிப்பை, குண்டிக்காய் முதலான நீர் நிலைகளுங் குருதியோடும் நரம்புக் குழாய்களும் அமைந் திருக்கின்றன. உலகில் ஞாயிறு திங்கள் தீயென்னும் முச் சுடர்கள் காணப்படுதல் போலவே, உடம்பில் வலக்கண், இடக்கண்ணும் புருவத்திற்கு நடுவே நெற்றிக்கண்ணுங் காணப்படுகின்றன. உலகில் அனற்காற்றுங் குளிர்காற்றும் வீசுதல் போலவே, உடம்பின் வலது மூக்கில் அனல்வளியும் இ து மூக்கிற் குளிர்வளியும் வீசுகின்றன. உலகமெங்கும் வான்வெளி பரந்திருத்தல் போலவே, உடம்பெங்கும் வான் வெளி பரந்திருக்கின்றது. இன்னும் இங்ஙனமே உலகத்தின் கண் உள்ள அமைப்புகள் அத்தனையும் உடம்பின் கண்ணுங் காட்டலாம், இருந்தவாற்றால் உலகினைப் பேருலகு என்றும், உடம்பினைச் சிற்றுலகு என்றுங் கூறுதல் இழுக்காது.

வ்

னி, எல்லாம் வல்ல கடவுள் இவ் வுலகங்களிலும் இவ்வுடம்புகளிலும் நிறைந்து நின்று வை தம்மை இயக்கினாலன்றி இவை தாமாகவே இயங்க வல்லன அல்ல; மற்று, உயிர்களோ சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையன வாகையால், இவை மிகப்பெரிய உலகங்களின் உள்ளும் புறம்புமுள்ள இயல்புகளை முற்ற உணரமாட்டாமையொடு, தமதுடம்பின் இயக்கத்தையே நன்கு நடைபெறுத்தவல்ல ஆற்றலும் இல்லாதனவாய்ச் சடுதியிலே மாய்ந்து போகுந் தன்மையவாய் இருத்தலின் இவை அவ்வுலகங்களையும் த உடம்புகளையும் இயக்குமென்றலும் ஏலாது. ஏலாதாகவே முழுமுதற்கடவுள் ஒருவனே இவை தம்மையெல்லாம் ஊடுருவி நின்று இயக்குகின்றானென்பது தானே போதரும். அங்ஙனம் அவன் இவ்விரு கூற்றிற்பட்ட உலகுகளை இயக்கு வதும், உயிர்களுக்கு மேன்மேல் அறிவு விளங்கச் செய்து, அவ்வாற்றால் அவைதந் துன்பத்தை அகல்வித்து இன்பத்தை நுகர்வித்தற் பொருட்டேயாகலான், அவன் இவ்வுலகுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/228&oldid=1591198" இலிருந்து மீள்விக்கப்பட்டது