உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

❖ - 27✰ மறைமலையம் – 27

திருக்கோயில்களில்

உள்ள திருவுருவங்களிலே

அவர்

பாருட்டுத் தோன்றி நின்று பேரருள் செய்த இறைவன் திருவருளை அவ்வுருவங்களின் வழிநாம் பெறுதலே எளிதிற் கைகூடுவதாகும். ஆகவே, கல் மண் முதலான பருப்பொருள் அடையாளங்களில் இறைவனை விளங்கச் செய்தற் பொருட்டுச் செய்யும் ஏனை எல்லா முறைகளையும்விட, அவன்றன் மெய்யடியார் அவ்வத் திருக்கோயிலின் மேற் பாடிய தேவார திருவாசகச் செந்தமிழ் L மாமறைத் திருப்பதிகங்களை அன்பினால் எடுத்தோதி அகங்கரைதலே கழிபெருஞ் சிறப்புடைத்தா மென்க.

என்றாலும், நிறைந்த அன்பும் ஆழ்ந்த அறிவுமில்லா ஏனைப் பொதுமக்கள் பொருட்டுத், திருக்கோயில்களிற் சிவலிங்கத் திருவுருவின் எதிரே அடுத்தடுத்து மேற்சொல்லிய வாறு முத்தீவேட்டு, அதன் கட்டோன்றும் முதல்வன் அச்சிவலிங்கத்தினுந் தோன்றி நின்றருள் வழங்குமாறு வேண்டித் திருமுழுக்குச் செய்தல் பெரிதும் நலம் பயப்ப தொன்றேயாமென் றுணர்தல் வேண்டும்.

இனித், தீப்பிழம்பின் வடிவான சிவலிங்கத்தை அமைத்துத் திருக்கோயில்கள் எடுப்பிக்கும் உண்மை யினையுஞ் சிறிது விளக்கிக் காட்டுவாம். நம் ஐம்புலனுக்கும், அவை வாயிலாக நடைபெறும் நமது மனனுணர்வுக்கும் புலனாகித் தோன்றிநின்ற இவ்வியற்கையமைப்பு உலகும் உடம்பும் என இருகூறாய்க் காணப்படுகின்றது. இவ்விரு கூற்றிற்பட்ட உலகு பெரிதாயும், உடம்பு சிறிதாயும் அமைக்கப்பட்டு நிலவு கின்றன. கின்றன. வடிவத்தாற் பெரிது சிறிதாயிருப்பினும், உலகத்தி லுள்ள அமைப்புகள் உடம்பிலும் உடம்பிலுள்ள அமைப்பு கள் உலகத்திலுங் காணப்படுகின்றன, உலகத்தில் வான், வளி, தீ, நீர், மண் என்னும் ஐம்பெரும் பொருள்கள் இருத்தல் போலவே, உடம்பிலும் வெளியும் மூச்சுஞ், சூடுஞ், செந்நீரும், எலும்பு, தோல், நரம்பு, தசை முதலான மண்ணின் கூறுகளும் அமைந்திருக்கின்றன. உலகில் மலைகளும் மரங்கள் அடர்ந்த காடுகளும் இருத்தல் போலவே, உடம்பில் என்புகளும் மயிர்த் தொகுதிகளும் அமைந்திருக்கின்றன. உலகிற் பொன்

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/227&oldid=1591197" இலிருந்து மீள்விக்கப்பட்டது