உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

201

ள்

முத்தீவேள்வி வேட்டுக் கல்லிலுஞ் செம்பிலும் இறைவனை ளங்கச் செய்யும் வினை ஏனைப் பொதுமக்கள் எல்லார் ாருட்டும் இன்றியமையாது செய்யப்படுவதா யிற்றென்க. ங்ஙனம் முத்தீ வேட்டு முதல்வனைப் பருப்பொருள் வடிவுகளில் விளங்கி நிற்கச் செய்த வழியும், முதற்கடவுள் உண்மையுணர்ந்து, அவனை யொருவடிவில் வைத்து, வணங்க விழைவு மீதூர்ந்து, பேரன்பிற்கு ஒரு கொள்கலனாகத் திகழும் மய்யடியார் உள்ளம் நீராய்க் உள்ளம் நீராய்க் கரைந்து கரைந்துருகி வழிபட்ட கல் மண் செம்பு கட்டை முதலானவைகளில் அவன் எக்காலுந் தோன்றி நின்று அருள் செய்யுமாப் போல் ஏனை அப்பருப்பொருள் வடிவுகளில் அவன் அத்துணை நில்லா னன்பதே தேற்றமாம். அதுபற்றி யன்றே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரையர், சுந்தர மூர்த்திகள், மாணிக்க வாசகர் முதலான மெய்யாசிரியன்மார் சென்று வழிபட்டுச் செந்தமிழ்ப் பாக்களால் வழுத்திய சிவபிரான் திருக்கோயில் களே சிறந்தனவென்று கற்றார் முதற் கல்லாதார் ஈறான எத்திறத்தாரும் அவற்றைப் பெரிது பாராட்டி வருகின்றார்.

மெய்யாசிரியன்மார் செந்தமிழ்ப் பாடலின் பொருட் டாகவே, காணவுங் கருதவும்படாத முதல்வனான சிவபிரான் காணவுங் கருதவும் எளிதாகிய சிவலிங்கக் கல்வடிவிலே விளங்கி நின்று அருள் செய்யும் உண்மை வெள்ளிடை விலங்கலென வீறித் தோன்றவும், இவ்வுண்மை ண்மை யினை மறைத்துத் தமக்குந் தமது ஆரிய மொழிக்கும் உண்மையில் இல்லாத ஒரு தெய்வத் தன்மை கற்பித்துக் கொள்வான் வேண்டி ஆரியரும் அவரது போலியொழுக லாற்றைப் பின் பற்றிய கோயிற் குருக்கண்மாரும், நம் தெய்வ ஆசிரியர் அருளிச் செய்த தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறைகளாற் சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றாது, எல்லாப் பொய்ம்மையும் நிறைந்த ஆரிய மொழிச் செய்யுட் களாலேயே வழிபாடு முற்றும் ஆற்றுகின்றார். ஒரு கற்றாவின்பாலைப் பெற வேண்டுவார், அதன் கன்றை அதன்பால் உய்த்து, அஃது உண்ண உண்ணப் பால் சுரந்து ஒழுகாநிற்புழி, அதனைப் பின்னர்த்தாம் கறந்து கைக்கொள்ளுமாப் போல், மெய்யடி யார் சென்று வழிபட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/226&oldid=1591196" இலிருந்து மீள்விக்கப்பட்டது