உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் 27

-

அறியாமை முனைப்பால் அம் மெய்யுரையினை விடுத்து முழுமுதற் கடவுளல்லாத சிற்றுயிர்களையும் உயிரல் பொருள்களையுந் தெய்வமெனத்துணிந்து இதுதான் கடவுள் அதுதான் கடவுள் என சைத்துத் தம் பிறவிப்பயனை இழப்பரென்பதூஉம், மற்று அங்ஙனம் அறியாமை வயப் பட்டார் போலாது மெய்யுணர்ந்தார் கூறும் மெய்யுரை யினை ஏற்று அதன்வழி நிற்கவல்ல நல்லார்க்கு எவ்வுயிர்க் கும் பொதுவாய் அருள் வெளியிலே ஆடல்புரியும் அம்பல வாணன் இன்பக் கூத்தினை நினைவு ஒருங்கி உணர்ந்து பிறவித் துன்பமறக் காணும் பேரின்பக் காட்சி வாய்த்தலின் அவர்க்கு உயிரினியல்பு, உலகினியல்பு, மலத்தினியல்பு முதலாயினவெல்லாம் பட்டப்பகலிற் கண்ணெதிரே காணப் படும் பொருள்போல் நன்கு புலனாமென்பதூஉம் மேலைத் திருப்பாட்டில் நன்கெடுத்து நுவலப்படுதல் காண்க.

இனி, இவைதம்மை முறையே விளங்க விரித்து ஆராய்ந்து காணப்புகுவாம். உலகத்தில் நம்மறிவிற்குப் புலனாகும் பொருள்களெல்லாம் அறிவில் பொருளும் அறிவுடைய உயிர்ப்பொருளும் என்னும்இருபெருங் கூற்றில் வந்தடங்குவன வாகும், இவைதம்முள், அறிவில் பொருள் களென்பன தாமே இயங்கமாட்டாவாய்ப் பிறிதொன்று இயக்கினால் இயங்குந் தன்மையவாகும்,இனி, அறிவுடைய உயிர்களென்பன தாமே அறிவனவாயும் பிறர் அறிவித்தன வற்றை அறிவனவாயும் பிறர்க்கு அறிவிக்கவல்லனவாயும் உயிரற்ற பொருள்களை இயக்கவல்லனவாயுமிருக்கும் எனவே, உயிரில்லாப் பொருளின் றன்மையும் உயிருடைய பொருளின் றன்மையும் வெவ்வேறாய் ஒன்றினொன்று மறுதலைப் பட்டு நிற்றலின்,இவை எக்காலத்தும் எவ்விடத்தும் ஒன்றினொன்று வேறான இயற்கையுடைய வாகவே இருக்கு மல்லாமல், அறிவில் பொருள் அறிவுடைப் பொருளாகவும், அறிவுடைப் பொருள் அறிவில் பொருளாகவும் மாறுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் நிகழ மாட்டாதென்க

அற்றேல், மேனாட்டவரில் இயற்கைப் பொருளா ராய்ச்சியிற் சிறந்தாரான ‘பாஸ்டியன்' (Bastian) என்பார், அறிவில்லாத பருப்பொருளினின்றே அறிவுடைய உயிர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/265&oldid=1591235" இலிருந்து மீள்விக்கப்பட்டது