உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

❖ 27✰ மறைமலையம் – 27

பின்றி அமைத்துக் கொண்டவனேயாவ னென்பதூஉம், அறிவில்லாதோன் என்று இழித்துச் சொல்லப் படுபவன் தான் கண்ட எந்தப் பொருளின் வடிவத்தையுந் தன்னுள்ளத் தின்கண் அமைத்துக் கொள்ள மாட்டாதவனேயாவ னன்பதூஉம், இறைவனறிவு இம்மாயையிற் காணப்படும் எல்லா வடிவுகளையும் முன்னரே யறிந்த உருவுகளுடையதா யிருப்பினல்லது இப்பருப்பொருள் வடிவுகள் தாமே தோன்றாவாகலின் இறைவனது பேரறிவு இறைவனது பேரறிவு இவையெல்லா வற்றையுந் தன்னகத் தடக்கிய உருவுடைய தாயே திகழு மென்பதூஉம் பிறவுங் “கடவுளுக்கு அருளுருவம் உண்டு” என்னும் எமது கட்டுரையில் நன்கு விளக்கியிருக்கின்றேம்; அவ்விரிவை அதன்கட் காண்மின்கள்!

அமைத்தல்

கண்டு

அஃதொக்கும்; இறைவனறிவு உருவுை யதாயே நிற்குமெனின்,அதனை அருவென்று கூறுதல் என்னை யென்பார்க்கு, உயிர்களும் உயிர்களின் அறிவுங் கண் முதலிய பொறிகளுக்குப் புலனாகாமை பற்றி அருவென்றும், உயிர்களின் அறிவு கட்புலனாகாவிடினும் புறப்பொருள்களில் தான்கருதிய வடிவினை அதனறிவு அவ்வடிவினோடொத்த உருவுடைய தென்றுங் கொள்ளுதல் போல, இறைவனும் இறைவன்றன்பேர் அறிவும் பொறி களுக்குப் புலனாகாமை பற்றி அருவென்றும், அங்ஙன மாயினும் அவன்றன் பேரறிவு எண்ணுதற்கடங்கா இத்தனை யுலகங்களையும் இவ்வுலகங்களிலுள்ள இத்தனை பண்டங் களையும் இவற்றிலிருந்து இவை தம்மை நுகர்தற்கு எண்ணிறந்த உயிர்களோடு கூடிய இத்தனையுடம்புகளையும் அமைத் திருத்தல் கொண்டு இவற்றின் வடிவுகட்கு முதலான உருவுகள் வாய்ந்த தொன்றாகவேயிருக்குமென்றும் விடுத்தல் வேண்டும், எனவே, அறிவெல்லாம்அழியா வுருவங் களுடை ய வாயேயிருக்கு மென்பதூஉம், அன்னவாயினும் அவை ஊனுடம்பில் அமைந்த பொறிகளின் வாயிலாக அறியப் படாமல் மாசற்ற அறிவுக் கண் கொண்டே காணப்படு மென்பதூஉம் நினைவிற் பதிக்கற் பாலனவாகும், திருஞான சம்பந்தர் மூன்றாண்டைச் சிறுமக வாயிருந்த ஞான்று கண்டு பாடிய இறைவனுருவம்,அவர் தந்தையார் கண்களுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/287&oldid=1591257" இலிருந்து மீள்விக்கப்பட்டது