உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

261

அம்மண்ணினின்று குடத்தை யுண்டாக்கும் அறிவுடை யனான குயவன் அங்ஙனந் திரிக்கப்படுதல் இலன், இன்னும், மண்ணினின்றும் குடம் முதலிய பாண்டங்களை உண்டாக்கும் முன்னரே,அவை தம்மை யுண்டாக்குங் குயவனது அறிவின்கண் அப்பாண்டங்களின் வடிவங்கள் அமைந்து கிடத்தல் வேண்டும்;

அங்ஙனமே

வ்

அங்ஙனம் அவ்வடிவங்கள் தன் அறிவின்கண் அமையப் பெறாதவன், அப்பாண்டங்களைச் சமைத்தற்குரிய அறிவு வாயாதவனாமாகலின், அவன் அவற்றை ஆக்கமாட்டுவான் அல்லன், ஆகவே, அறிவில்லாத மாயையிலிருந்து இவ்வுலகங் களும் இவ்வுலகத்துப் பொருள்களும் இவ்வுடம்புகளு ம் இ வுடம்புகளில் அமைந்த கருவிகளும் படைக்கப் படுதற்கு முன்னரேயே, இவற்றை யெல்லாம் படைக்கும் இறைவனது பேரறிவின்கண் அப்பொருள்களின் உருவங்கள் அமைந்து கிடத்தல் வேண்டுமென்பது தெளியப்படும், எங்ஙனங் குயவனதுஅறிவின்கண் அமைந்த உருவங்களோடு ஒத்த வடிவுடை ய பாண்ட ங்கள் மண்ணினின்றும்அவனாற் படைக்கப்படுகின்றனவோ, றைவனது அறிவின்கண் அமைந்த உருவங்களோடொத்த வடிவுடைய உலகமும் உடம்பும்பிறவும் மாயையினின்றும் அவனாற் படை க்கப்படுவனவாகும், எங்ஙனங் குடங்கள் முதலான பாண்டங்களின் வடிவு சிதைந்தழிந்தாலும்அவற்றோ டொத்த அறிவினுருவங்கள் குயவனுள்ளத்தின்கண் அழியா வாய் நின்று அப் பாண்டங்களை மறித்தும்மறித்துந் தோற்று விக்குமோ, அங்ஙனமே இவ்வுலகங்களும்இவ் வுடம்புகளு பிறவும் வடிவு சிதைந்து அழிந்தாலும் அவற்றோடொத்த அறிவினுருவங்கள் இறைவன் றிருவுள்ளத் தின்கண் அழியாவாய் நின்று அவைதம்மை மீண்டும்மீண்டுந் தோற்று வியா நிற்கும், இது கொண்டு, மாயையின் வடிவு அழிதல் போல, இறைவனது அறிவுருவு அழிவதன்றென்ப தூஉந் தெற்றென விளங்கும்.

இன்னும், அறிவுடையோன் என்று உயர்த்துச் சால்லப் படுபவன், தான் உணர்ந்த பொருள்களின் வடிவங் களோ டொத்த உருவங்களைத் தன் அறிவின்கண் ஐயந்திரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/286&oldid=1591256" இலிருந்து மீள்விக்கப்பட்டது