உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் - 27

யெழுந்ததாகும், அல்லதூஉம், இல்லாத வெறும் பாழைப்பற்றிப் பேசுவாருங் கேட்பாரும் யாண்டு மிலராக லானும், உயிர்களும் பொருள்களுமிருந்தே முப்பொரு ளாராய்ச்சி நிகழவேண்டுமாகலானும்,நிலை மாறுவன உள்பொருள்களே யல்லாமல் இல் பொருள்களாதல் செல்லாமையானும், தன்கண் ஏகான்ம வாதங் கூறுவாருரை ஒரு சிறிதும் பொருந்தாதென விடுக்க,

'சிவம்’ என்னுஞ் சொல் செம்மை யென்னும் பண்படியாகப் பிறந்து சிவந்த நிறத்தையும், இன்பத்தையும் உணர்த்துஞ் சிறந்ததமிழ்ச் சொல்லாமாகலானும்,இறை வன்றன் அறிவுருச் சிறந்த நிறத்தினதாயும் இன்ப நிலை யினதாயும் இருக்கும் உண்மையினை நமக்கு நினைவுறுத்திக் காணவுங் கருதவும் படாத முதல்வன்றன் அறிவுருவினை நாம் காணவுங் கருதவும் எளியதாம்படி வைத்து நமக்கு நினைவொருமை யினைப் பயப்பிப்பதில் இச்சொற் போலக் கடவுளுக்குரிய வேறெச்சொல்லும் உதவிபுரிவதின்மை யானுஞ், சிவம் என்னும் இச்சொல்லையே கடவுளுக்குச் சிறந்த பெயராக 6 வைத்துப் பண்டைக் காலந்தொட்டு இன்று காறும் ஆன்றோர்கள் வழங்கி வருதலானும், ஈண்டு அடிகளாரும் அச்சொல்லையே சிறந்ததாக எடுத்து அருளிச் செய்வா ராயினர். அடிகளார் பிறாண்டுஞ் “சிவம் பிரமமுடியே” என்று ஓதுவதூஉங் கருத்திற் பதிக்கற்பாற்று,

இனிச், சிவம் ஒன்றே மெய்ப்பொருள் என்று ஆழ்ந் தாராய்ந்து கண்ட தொல்லாசிரியர்களும், அவர் வழி பிழை யாது வந்த அடிகளாருந் தாங்கண்ட அவ்வரும் பேருண்மை யினை, மக்களெல்லாரு முணர்ந்து உய்தல் வேண்டுமென்

றழுந்த பேரிரக்கத்தால் அடுத்தடுத்தெடுத் துணர்த்தி வரவும், அதனைக் கடைப்பிடியாது, பிறந்து பெருந் துன்பங்களிற் பட்டுழன்று இறந்து ஒழிந்த அரசர் களையும் இழிந்த மக்களையுமெல்லாந் தெய்வங்களாக வழிபட்டுப் பிறவியைப் பாழ்படுத்தி இருள் நிரயத்திற்குஞ் செல்லுங் கீழ்மக்களை அது செய்தலாகாதென்று மேலைச் செய்யுளின் பின்னிரண்டடிகளில் தடுத்தருளினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/289&oldid=1591259" இலிருந்து மீள்விக்கப்பட்டது