உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம் மேலைச் செய்யுளின்

265

இனி, இறுதிப்பகுதியில், இறைவன் எல்லாவுயிர்களின் அகத்தே நெஞ்சத்தாமரையின் அறிவு வெளியிலும், புறத்தே எண்ணிறந்த வுலகங்கட் கெல்லாங் களைகண்ணாம்அருள் வெளியிலும் பொதுநின்று ன்ப ஆடல் புரியும் இயல்பினை, ஞானாசிரியன் மெய்யுரை வழிநின்று மூச்சையடக்கி, மூலத்திலுள்ள குண்டலியை யெழுப்பி, அதனோடு உணர்வினை ஒருங்கியைத்துக் காண்டு, நெஞ்சத் தாமரையின் அகத்தே சென்று கண்டு இன்புறும் ஞானயோகப் பயிற்சியுடையார்க்கு, எல்லா அறிவும் எல்லாஇன்பமும் ஒருங்கெழுந்து, தோன்றும் என்றருளிச் செய்து முடித்தமை இவ்வுண்மை ஆசிரியர் திருமூலர் அருளிச் செய்த,

66

"நாசிக்கு அதோமுகம் பன்னிரண் டங்குலம்

நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப் பெய்துந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே

பெருகித்

காண்க!

என்னுந் திருப்பாட்டானும் நன்கு தெருட்டப்பட்ட தென்க.

அடிக்குறிப்பு

1. "Life does not appear without the operation of antecedent life” Fragments of Science by Prof. J. Tyndall, Vol.II. p. 299.

சைவசித்தாந்த ஞானபோதம்

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/290&oldid=1591260" இலிருந்து மீள்விக்கப்பட்டது