உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

66

வேதாந்த சித்தாந்தம்

ஆரணமார்க்கத் தாகமவாசி யற்புதமாய் நடந்தருளுங் காரணமுணர்த்துங் கையுநின் மெய்யுங் கண்கண் மூன்றுடைய

வென்கண்ணே

பூரணவறிவிற் கண்டிலமதனாற்போற்றியிப் புந்தியோடிருந்து தாரணியுள்ள மட்டுமே வணங்கத் தமியனேன்

வேண்டிடத்தகுமே'

சீவான்மாக்கள் உய்யும்பொருட்டுத் தனுகரண புவன போகங்களைப் படைத்துக் கொடுத்தருளிய சிவபெருமான் அவர் அறிவை இனிது விளங்கச் செய்யும் பொருட்டு, ருஷிபுங்கவரையுஞ் சீகண்ட பரமேசுரரையும் அதிட்டித்து வெளியிட்டருளிய பிரமாண நூல்கள் வேதமும் சிவாகமங் களுமாம். அதிபரிபக்குவ முடையார்க்கு இன்றியமையாது வேண்டப்படும் முடிபொருளை யுணர்த்தும் வேதத்தின் ஞானகாண்டப் பகுதியே வேதாந்த மெனவும், அதிதீவிர பரிபக்குவமுடையார்க்கு அங்ஙனமே முதன்மையாகப் பெறக் கிடந்த சிவப் பேற்றை உணர்த்தும் சிவாகமப் பகுதியே சித்தாந்தம் எனவும் அறிவுடையோரால் வழங்கப்பட்டு வருகின்றன.

இனி இவ்வேதாந்த சித்தாந்தம் இரண்டும் சுத்த அனுபவ சாஸ்திரங்களாகும். வெறும் வாசாகயிங்கரியமாக விவரிக்கப்படு கின்ற தர்க்கம் மீமாம்ஸம் முதலிய சாஸ்திரங் களைப்போலாது, சுத்த ஞான மயமாய்ச் சுத்த ஆனந்த மயமாய்ச் சுத்த அருள் மயமாய் அருவாய் விளங்கும் பரப் பிரமமான சிவத்தை வாக்கு மனங் கடந்து நின்றனுபவிக்கும் முடிந்த நிலையை அறிவிக்கும் ஞானசாஸ்திரங்களான இவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/292&oldid=1591262" இலிருந்து மீள்விக்கப்பட்டது