உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

❖ * மறைமலையம் – 27

விசேஷ அறிவோ டிருந்து விசாரிக்கற் பாலனவாம். இந்த மெய்யனுபவ வுண்மை,

66

'அத்துவிதவத்துவைச் சொப்ரகாசத்தனியை யருமறைகண்முரசறையவே

அறிவினுக்க றிவாகியானந்த மயமானவா தியையநா தியேக தத்துவசொரூபத்தை மதசம்மதம் பெறாச்சாலம் பரகிதமான

சாசுவதபுட்கலநி ராலம்பவாலம்பசாந்த பதவ்யோம நிலையை நித்தநிர்மலசகி தநிஷ்ப்ரபஞ்சப் பொருளை நிர்விஷயசுத்தமான நிர்விகாரத்தைத்தடத்த மாய்நின்றொளிர்நிரஞ்சன நிராமயத்தைச் சித்தமறியாதபடி சித்தத்தினின் றிலகுதிவ்யதேசோ மயத்தைச் சிற்பரவெளிக்குள்வளர் தற்பரமதான பரதேவதையை

யஞ்சலிசெய்வாம்

என்ற அருமைத் திருவாக்கால் வலியுறுத்தப்பட்டமை காண்க.

L

இவ்விரண்டும் அதி விசிட்ட பக்குவமுடையார்க்குப் பயன்படு முகத்தால் எழுந்த முதல் நூல்களாம். அற்றேல், இவை இரண்டு நூல்களாய்க் கொள்ளப்படுவதென்னை? ஒன்றே அமையுமாலோ வெனின்; விசிட்ட பக்குவத்திலும் தீவிர பக்குவம், தீவிரதரபக்குவம் என இருவகைப் பாகு பாடு உளதாகலின் அப்பாகுபாட்டிற்கேற்ப வேதாந்தமுஞ் சித்தாந்த முமென இரண்டெழுந்தன. தீவிர பக்குவ முடை யார்க்கு வேதாந்தமும் தீவிரதரபக்குவமுடையார்க்குச் சித்தாந்தமும் பயன்படுதலுடையவாம். மந்ததரம், மந்தம், தீவிரம் என்னும் பக்குவமுடைய மூவர் பொருட்டு வேதம் கன்மகாண்டம், உபாசனாகாண்டம், ஞானகாண்டம் எனப் பகுக்கப்பட்டுக் ம் கிடந்த வாறுபோல, தீவிரம் தீவிரதரம் என்னும் விசிட்ட பக்குவ முடையார் பொருட்டும் வேதாந்தம் சித்தாந்தம் என்னும் பாகுபாடு பிறந்த தென்க. மந்ததர பக்குவமுடையார் அறிவு மிக மழுங்கி மலினமேறிக் கிடத்தலால் அவர்க்குச் சிறிதறிவு விளங்கும் வண்ணம் சோதிட்டோமம் அசுவமேதம் அஜமேதம் முதலிய யாக கன்மங்களை வகுத்தெடுத்துக் கூறிய வேதத்தின் கன்ம காண்டப்பகுதி அவ்வகையால் அவரறிவைச் சிறிது முறுகு வித்து மந்தபக்குவமாக்கி உபாசனா காண்டப் பகுதிக்கு அதிகாரமுடையராக்கி விடுத்தொழியும். பின்னர் உபாசனா காண்டப் பகுதி மந்த பக்குவமுடையார்க்கு மேலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/293&oldid=1591263" இலிருந்து மீள்விக்கப்பட்டது