உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த சித்தாந்தம்

269

அறிவு விளங்குதற் பொருட்டு ஒன்றினொன் றேற்றமுடைய பல வேறு வகைப்பட்ட தேவோ பாசனைகளை விதந் தெடுத்துக் கூறி அவ்வகையால் அவரறிவை முதிரச்செய்து ஞான காண்டப் பகுதியினைப் பயிலுதற்குரிய தீவிர பக்குவ முடையராக்கி விடுத்தொழியும். இனி ஞானகாண்டப் பகுதியும் தீவிரபக்குவ முடையானுக்கு வேண்டற் பாலதாய் நின்று அவனறிவை விரிவு செய்யும் ஜகத்ஜீவ பரங்களினியல் புணர்த்திச் சீவன் தன்னைச் சிவனாய்க் காணுமாறு வலியுறுத்தி அவ்வாற்றால் அவனறிவை வரம்பின்றி முதிரச் செய்து தீவிரதரபக்குவ முடையனாக்கிச் சிவாகமங்களைப்

னிச்

பயின்றனுட்டித்தற்கு அதிகாரியாக்கி விடுத்தொழியும். சுத்த சிவத்தையேயுணர்த்தும் சிவாகம ஞானப்பகுதி தீவிரதர பக்குவ முடையான் கருவிகரணங்க ளெல்லாங் கழன்று சிவனருளிற்றோய்ந்து சிவனாயே நிற்குமாறுணர்த்தி முடிந்த சித்தாந்தமாய் நிற்ப தொன்றாம். வேதத்திற் கன்ம காண்ட உபாசனாகாண்டப் பகுதிகள் அதன் ஞான காண்டத்திற் பக்குவ முடையாரைச்செலுத்தும் அம் மாத்திரைக்கே பயன் படுமல்லது, அந்த ஞானகாண்டப் பொருளோடு ஒற்றுமை யுற்று நிற்பன வல்லவாம். இனி வேதத்தின் ஞானகாண்டப் பாருளோ அவைபோலாது, சிவாகம நானகாண்டப் பொருளோடு முழு தொத்து நிற்கும் அந்தரங்க உரிமை உடைத்தாம். ஆகையால், வேதாந்தமான உபநிடதங்கள் பொதுவென்றும் சித்தாந்த மான சிவாகமங்கள் சிறப்பென்றும் மகா யோகிகளான திருமூலரால்

வேதமொ டாகமம் மெய்யா மிறைவனூல் ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன நாத னுரையிவை நாடிலிரண் டந்தம் பேதம தென்னிற் பெரியோர்க் கபேதமே

6

என்று அவை அவ்வாறு அருளிச் செய்யப்பட்டன.

எனவே, வேதாந்தமும் சித்தாந்தமும் பரிபாகிகள் பேதத்தால் இரண்டாகச் சொல்லப்பட்டனவே யன்றி, அவை யிரண்டுந் தம்முட் சிறிதும் முரணாவென்பது இனிது பெறப்படும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/294&oldid=1591264" இலிருந்து மீள்விக்கப்பட்டது