உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

❖ மறைமலையம் - 27

அற்றேல், இனி வேதாந்தமாவது யாதெனின்:-

அனாதி சீவனைம் மலமற்றப் பாலாய்

அனாதி யடக்கித் தனைக்கண் டரனாய்த் தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்

வினாவுநீர் பாலாதால் வேதாந்த வுண்மையே

என்ற அருட் டிருவாக்கால் வேதாந்த மிது வென்பது தெள்ளிதி லுணர்த்தப்பட்டது. இதன் பொருள்: “அனாதி யாயுள்ள ஆன்மாக்கள் ஐந்து மலபந்தங்களுமறுத்து அவற் றிற்கும் அப்பாற்பட்ட சிவனையே ஆதாரமாய்க் கொண்டு, அனாதியாயுள்ள ஆணவ வலியை அடக்கித் தன்னை அரனுருவாய்க் கண்டு, அங்ஙனங் காணப் பெறுமாற்றால் தன்னைப் பொதிந்த மலம் தானே வலிகெட்டொழியத் தத்துவங்களின் புறம்பே பாலோடளாய நீர்போலச் சிவசத்தியோ டியைந்து நிற்றலே நீ கேட்ட வேதாந்த உண்மையாம்”.

‘அனாதி சீவன்' என்றமையால் பிரமமே ஒரு காலத்து மாயை யாற் பற்றப்பட்டுச் சீவனாயிற் றென்னும் மாயாவாதம் வேதாந்த மாகாமை பெறப்பட்டது. அங்ஙனம் அனாதியா யுள்ள சீவனும் ஒன்றல்ல பலவுள்ளன என்று ஆசிரியர்,

று

“பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக் கட்டிய பாச மூன்றுண்டு பசுத்தன்மை நீக்கியப் பாச மறுத்தாற் பசுக்க டலைவனைப் பற்றி விடாவே

ன்றே

னி

என்று வேறிடத்தும் ஓதியவாற்றால் ஆன்மா யென்னும் ஏகான்ம வாதமும் மறுக்கப்பட்டது. அனாதி சிவரூபமாகிய ஆன்மா' என்னும் ஏதோ ஒரு விடுதிப்பாட்டுத் திருமந்திரத்தி லுள்ளதாகப் பிறழ உணர்ந்து,

66

சிவமே ஏதோ காரணத்தால் மலத்தாற் பற்றப்பட்டுச் சீவனாயிற்று' என்று ஆன்றோருரை வழக்கோடும் அனுபவ வழக்கோடும் முரணிக் கூறினாருமுளர். அப்போலிப் பாட்டுத் திருமந்திரத்திருவாக்கன்றாகலானும், பிரமாணமன்றாய் யாரோ கட்டிவிட்ட அதுகொண்டு ஏனையனுபவ சாத்திரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/295&oldid=1591265" இலிருந்து மீள்விக்கப்பட்டது