உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த சித்தாந்தம்

271

களுக்கெல்லாம் பொருந்தாவாறாய்ப் புதிதொன்று உரைத்தல் இழுக்காமாகலானும் அவருரைக் கூற்றுப் பொருந்தாதென

மறுக்க.

66

ஐம்மலம்”

என்றமையால் ஆணவம், கன்மம், சுத்தமாயை அசுத்தமாயை, திரோதாயி என்னும் ஐந்து மலங்களுண் டென்பதும், ‘அனாதி யடக்கி' என்றமையால் அவை யைந்தும் அநாதி நித்தியமா மென்பதும் வலியுறுத்தப் பட்டன. இதனால் ‘மலம்' சூனியமென்னும் மாயாவாதம் மறுக்கப்பட்டதூஉங் ன்னும் ஆணவமின்று, கன்மமும் மாயையுமே உள்ளன வென்பாரும், சுத்தமாயை அசுத்தமாயை யென இருவேறு மாயைகளில்லை சுத்த மாயையே அசுத்த மாயையா மென்பாரும் மறுக்கப்பட்டனர்.

66

காண்க.

“அப்பாலாய்” என்றது இறைவன் ஆன்மாக்களோடும் ஐந்து மலங்களோடும் அனாதி தொட்டே ஒற்றித்து நிற்பினும், அவனியல்பு சேதனம், அசேதனம் என்னும் இவ்விரு பொரு ளியல்புக்கும் அப்பாற்பட்ட தொன்றென்பது அறிவித்தது. ஆன்மாக்கள் மலத்தான் மறைக்கப்பட்ட சேதன ரூபிகள். றைவனோ அங்ஙனம் அதனாற் பற்றப்படாது அனாதியே சொயம்பிரகாச விளக்காய்ப் பொலியும் சேதன ரூபியாம், மலங்களோ அசுத்தமான அசேதன ரூபமாம். இறைவனோ சுத்தமான சேதன ரூபியாய் நிற்கும். இங்ஙனம் சேதனா சேதனப் பிரபஞ்சங்களை யெல்லாங் கடந்து நிற்கும் இயல்புடைய னாதல் பற்றி யன்றே,

66

அளவையெலாங் கடந்து மனங்கடந்து மற்றைய றிவையெலாங் கடந்து கடந்தமலயோக

ருளவையெலாங்கடந்து பதங்கடந்து மேலையொன்று

கடந்துணரச் சூழ்ந்த

கடந்திரண்டு

களவையெலாங் கடந்தண்டபிண்ட மெல்லாங் கடந்து நிறைவான

சுகக்கடலேயன்பர்

வளவையெலாமிருள கற்றுமொளியே மோனவாழ்வேயென்

னுயிர்க்குயிராய்வதியுந்தேவே"

என்னுந் திருவாக்கு மெழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/296&oldid=1591266" இலிருந்து மீள்விக்கப்பட்டது