உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

❖ - 27✰ மறைமலையம் - 27

இனித் ‘அனாதி யடக்கி' என்றது தொன்று தொட்டுத் தன்னுடனாய் நின்று தன்னறிவை மறைத்துத் தன்னை ஏகதேசப்படுத்தி வந்த ஆணவமல வலியை உயிர்தா னிறைவனை ஆதரவாய்க்கொண்ட வாற்றால் ஒடுக்கிக் கொள்ளும் என் றுணர்த்திய தென்க.

னி தனைக் கண் ரனாய் என்றது அங்ஙனம் றைவனை ஆதரவாய்க்கொண்டு ஆணவமல வலியை ஒடுக்கிநின்ற ஆன்மாவானது பின் அவ்வியல்பினின் சிறிதும் பிறழாமைப்பொருட்டு அவ்விறைவனது அருளு ருவைத் தன்னுருவாய்க் கண்டு நிற்குமென அறிவித்தது. இதனால் ஆ ன்மாத் தன்னைப்பந்தித்த மலசேட்டை ஓடுக்குதலே வேதாந்த முடிபா மென்க. இறைவனியல்பு தானே யாய் நிற்குந் தகைமையது; ஆன்மாவி னியல்பு தான்சார்ந்த பொருள் வயமாய் நிற்குந் தகைமையது. பளிங்கானது தன்னைச் சார்ந்த வண்ணங்களைத் தன்கட் பிரதிபலனமாய்க் கொண்டு தான் அவ்வண்ணமே தன்னுருவாய்க் கொண்டு நிற்குமாறுபோல, ஆணவம் மாயை கன்மங்களைச் சார்ந்து நின்ற வழித் தன் குணங் குணங் குறி செய்கைக ளெல்லாம் அவற்றியல்பாய் நிற்கும். மன்னவ குமாரன் ஒருவன் தன் குழந்தைப் பருவத்திலேயே வேடர் களால் அபகரிக்கப்பட்டுக் காட்டிலே அவரோடு உடன் வளர்ந்து அவர்க்குள்ள குணங்குறி செய்கைகளெல்லாம் தன் மாட்டுத் தோன்றத் தான் மன்னவ குமாரன் என்பதைச் சிறிது முணராமல் இருந்தான். பின்னர் அவன் தந்தையான வேந்தன் அவனைத் தலைப்பட்டு ‘நீ வேடர் மகன் அல்லை, என் மகனாவை’ என்றுணர்த்திய வழி அவன் தன் பெருமையை யுணர்ந்து தன் தந்தையின் அரசுரிமைச் செல்வமெல்லாம் பெற்றுக் களித்தான். இதுபோலவே, பஞ்சமலக்கொத்தின் வயப்பட்டு உழன்ற ஆன்மாக்களை இறைவன் குருவுருவாய் வெளிப்பட்டு நின்று அனுக்கிரகித்து அவற்றைத் தன்னுருவாக்கிக் கொள்வன். இவ்வுண்மை,

“மன்னவன் றன்மகன்வேட ரிடத்தேதங்கி வளர்ந்த வனையறியாது

மயங்கிநிற்பப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/297&oldid=1591267" இலிருந்து மீள்விக்கப்பட்டது