உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த சித்தாந்தம்

-

281

அற்றேல், ஆதமா முத்தியில் இல்லாத சூனியப் பொருளாயொழியும் போலுமெனின் அற்றன்று. ஆணவ மல சம்பந்த முற்றிருக்குங்காறும் 'பசு' வென்னும் பெயர் பெற்ற உயிரானது அதன் சம்பந்த மறுத்துச் சிவசம்பந்த முற்றுச் சிவமாய் நின்றவழி அதனை அப்பெயரிட்டு வழங்கலாகா தென்றதே யன்றிப்பொருளுண்மை ஆண்டும் மறுக்கப்படா தவாறேயா மென்க. இம்முடிந்த வுண்மை. “கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாளனாய் வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம் பல்லோருங் காண வென்றன் பசுபாச மறுத்தானை எல்லோரு மிறைஞ்சு தில்லை யம்பலத்தே கண்டேனே"

என்னும் ஸ்ரீமந். மாணிக்கவாசக சுவாமிகள் திருவாக்கிற் காண்க. ஆயினும் அவாங்மனகோசரமான அந்த முத்தி நிலையைப்பற்றித் தாயுமான சுவாமிகளே “ஆனாலு மிதன் பெருமை யெவர்க்கார் சொல்வார்” என்று சொல்லக் கூடாமையைத் தெரிவித்தருளினர்களாயின் ஒன்றுக்கும் பற்றாத சிறியேன் எங்ஙனம் அதனை உரைக்க வல்லேன்? அம்முத்தி நிலையை சித்தாந்தச் செல்வர்,

அதனை உண்மையா

முத்திதனின் மூன்று முதலு மொழியக்கேள்

சுத்த வனுபோகத்தைத் துய்த்தலணு மெத்தவே இன்பங் கொடுத்தலிறை யித்தைவிளைவித்தன் மலம் அன்புடனே கண்டு கொளப்பா

என்றருளிய திருவாக்கான் உணர்ந்துகொள்க.

66

னுணர்ந்த

இனி, ஆரண மார்க்கத் தாகமவாசி” என்னுந் திருவாக்கிற் சோகம் பாவனை செய்தற்கு இன்றியமையாத மெய்ப்பொருள் முறையும் உபதேசிக்கப்பட்டிருக்கின்றது. அது பக்குவமுடைய சீடனியல்பறிந்து மெய்க் குருவால் உணர்த்தற்பாலதன்றி, வேறொரு வாற்றானும் வெளியிடற் ற் பாலதன்றாகலானும், வெளியிடிற் பெரியோர் சாபம்வந் தெய்துமாகலானும் அதனைப் பற்றிச் சிறிது முரையாது விடுக்கின்றாம்.

வேதாந்த சித்தாந்தம் முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/306&oldid=1591276" இலிருந்து மீள்விக்கப்பட்டது